தினமும் காலையில் பெண்களில் பலர் செய்யும் முதல் வேலை வாசல் தெளித்து கோலம் போடுவதாகவே இருக்கும். இவர்கள் கோலம் போடுவதற்கான சில ஆலோசனைகள்:
பண்டிகை நாள்களில் தலைவாசல் படியை நீர் விட்டு கழுவி கோலம் போட வேண்டும். கட்டாயம் செம்மண் கரை கட்ட வேண்டும்.
வாசல் மண் தரையானால் நன்கு பெருக்கி விட்டு தெளித்து கோலம் போட்டு செம்மண் அல்லது காவி கரையிட வேண்டும். அம்பாள் கோலம் போடும் வீட்டுக்கு மனம் மகிழ்ந்து வருவாள் மகாலட்சுமி வந்து அருள் தருவாள்.
கோலப்பொடி வாங்கும்போது வெளுப்பு அதிகம் உள்ள பொடியை வாங்க வேண்டும் அல்லது கோலப்பொடியுடன் பச்சரிசி மாவையும் கலக்கலாம். கோலப்பொடியுடன் அரிசி மாவு கலந்து நைசாக இருந்தால் கோலக் குழாயில் கோலம் போடும்போது குழாயின் துளைகள் அடைபடாது.
புள்ளியில்லாமல் கோலம் போடும்போது முதலில் ஒரு புள்ளியை மையமாக வைத்து அதைச் சுற்றி கோலத்தை விரிவாக்க வேண்டும்.
அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள் தங்களது வீட்டின் முன் செம்மண்ணால் மெழுகுவிட்டு அதன் மேல் கோலமிட்டால் பளிச்சென்று தெரியும்.
கோலப்பொடி வாங்கி சலித்தவுடன் கால்படி மாவுக்கு நூறு கிராம் பச்சரிசி மாவு கலந்து கோலம் போட்டால் அதன் மேல் பூசணி பூ வைக்க மிகவும் அழகாக இருக்கும்.
அரிசி மாவு கலந்த சலித்து கோலப்பொடியை கோலக்குழாயில் திணித்து போடும்போது குழாயின் துளைகள் அடைபடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.