தோசைக்காய் சாதம்
தோசைக்காயின் தோல், விதைகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்குங்கள்.
தேவையான பொருள்கள்:
உதிரியாக வடித்த சாதம் - 2 கிண்ணம்
தோசைக் காய்- 1
பச்சை மிளகாய்- 6
புளி- சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
கடுகு- அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- 3
பெருங்காயம்- அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
தோசைக்காயின் தோல், விதைகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள். ஒரு மேசைக்கரண்டி எண்ணெயில் தோசைக் காயை வதக்குங்கள். பிறகு பச்சை மிளகாய், புளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்கி இறக்குங்கள். ஆறியதும் கரகரப்பாக அரையுங்கள். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளியுங்கள். சாதத்தில், அரைத்த விழுது, உப்பு, கடுகு தாளிதக் கலவை ஆகியவற்றைச் சேர்த்துகலக்குங்கள்.
நாகஜோதி கிருஷ்ணன்