மகளிர்மணி

வீடு கட்டுவோர் கவனத்துக்கு...

புதியதாகக் கட்டும் வீடு குடும்பத்தினருக்கும், எதிர்காலச் சந்ததியினருக்கும் இருக்கும் என்பதால், ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாகச் செயல்படுவது அவசியம்.

தினமணி செய்திச் சேவை

எம்.ஞானசேகர்

புதியதாகக் கட்டும் வீடு குடும்பத்தினருக்கும், எதிர்காலச் சந்ததியினருக்கும் இருக்கும் என்பதால், ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாகச் செயல்படுவது அவசியம்.

கட்டடத்தின் ஒவ்வொரு பணியிலும் அப்போதைய தேவை மட்டுமல்லாது, எதிர்காலத் தேவையையும் கவனத்தில் கொள்வது நல்லது. அஸ்திவார நிலையில் இருந்தே இதுபோன்ற எண்ணம் வர வேண்டும்.

தேவைக்கேற்ப பிரித்துப் பயன்படுத்த எளிதாக இருக்கும் என நினைத்து, ஜன்னல் பகுதிகளை ஸ்குரு டைப்பில் அமைப்பதைத் தவிர்ப்பது நல்லது. இந்த விஷயத்தால் திருட்டு சம்பவங்கள் நேரிட வாய்ப்பாக அமையும்.

மின்சார இணைப்புகளில் ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக சர்க்யூட் சுவிட்சுகளை அமைப்பது நல்லது. எதிர்காலத் தேவைக்கு என்று சுவிட்ச் பாக்ஸ்கள், ஜங்ஷன் பாக்ஸ்கள் கூடுதல் நீளத்துக்கு கேபிள்கள் விடப்படுகிறது. இந்த கேபிள்கள் உள்ளேயே சுற்றி வைக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும். மின்சார பாயின்டுகளையும் அதிகமாக அமைப்பதைத் தவிர்க்கலாம். பிரதான மின்சார இணைப்புப் பெட்டியினுள் கூடுதல் நீளத்துக்கு கேபிள்களை அமைக்காதீர்கள். இது மின்கசிவு காலத்தில் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

மேல்மாடியில் எதிர்காலத் தேவை என்ற பெயரில் அதிக நீளத்துக்கு கம்பிகள் நீட்டிக் கொண்டு இருப்பது ஆபத்துக்கு வழிவகுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

விநாயகர் சதுர்த்தி... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT