மகளிர்மணி

முடக்கத்தான் கீரை சட்னி

வெங்காயம், பச்சை மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும். முடக்கத்தான் கீரை சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தேவையானவை:

முடக்கத்தான் கீரை -1 கட்டு

நறுக்கிய வெங்காயம் - 1 கிண்ணம்

பச்சை மிளகாய் - 1

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தனியா தூள் - அரை தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும். முடக்கத்தான் கீரை சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்துவைத்த விழுதுகளை ஒன்றாக கலந்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். இந்தக் கலவை வதங்கியபிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கி கெட்டிப்பட்டதும் எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொத்து வரி விவகாரம்! பிரிட்டன் துணைப் பிரதமர் ராஜிநாமா!

செப்டம்பர் மாத எண்கணித பலன்கள் - 4

செப்டம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

செப்டம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

செப்டம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

SCROLL FOR NEXT