மகளிர்மணி

வெந்தயக் கீரை சாதம்

கீரையைச் சுத்தம் செய்து, கழுவி, பொடிப் பொடியாக அரிந்து கொள்ளவும்.

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தேவையான பொருள்கள்

கீரை- 1 கட்டு

மிளகாய் வற்றல்- 4

கடலை பருப்பு -4 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு -3 தேக்கரண்டி

தனியா- 2 தேக்கரண்டி

எண்ணெய் -5 தேக்கரண்டி

கடுகு- 1 தேக்கரண்டி

தேவையானால் சிறிய தேங்காய் கீற்று

செய்முறை:

கீரையைச் சுத்தம் செய்து, கழுவி, பொடிப் பொடியாக அரிந்து கொள்ளவும். வெறும் வாணலியில் 2 தேக்கரண்டி கடலை பருப்பு, 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் இவற்றை வறுத்து தேங்காயுடன் பொடி செய்து வைத்துகொள்ளவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி, மீதியுள்ள பருப்புகளை கடுகு வெடித்ததும் போட்டு, மஞ்சள் தூள், சிறிது பெருங்காயத்தூளுடன் போட்டுக் கீரையையும் போட்டு வதக்கவும்.

சற்று வதங்கிய பின்னர், கெட்டியாக புளியைக் கரைத்து ஊற்றி, கொதிக்க விடவும். தேவைக்கேற்ப உப்புப் போடவும். சற்று புளி வாசனை போனதும் தேவையானால் சிறிய கட்டி வெல்லமும் சேர்க்கலாம். பிறகு அரைத்துப் பொடி செய்து வைத்துள்ள பொடியைக் கொட்டி இறக்கவும். பொல பொலவென்று சாதம் வடித்து, ஆறவிட்டு கிளறி மூடி வைக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?

SCROLL FOR NEXT