பெண்களின் முகத்துக்கு பொட்டு வைப்பது அழகு.
அதிலும், அதை எப்படி வைப்பது குறித்த ஆலோசனைகள்:
சாந்து பொட்டு வைக்கும்போது, பொட்டு வைத்தால் முகப் பௌடர் பூசிக் கொண்டால் முகம் பளிச்சென்று தோற்றம் அளிக்கும். குங்குமப் பொட்டு இடும்போது, பௌடரை முதலில் பூசிவிட்டு பின்னர் பொட்டு வைக்க வேண்டும்.
நெற்றியில் பொட்டிட்டவுடன் அதன் ஈரம் காய்வதற்குள் அதற்கென்று உள்ள ஜிகினா பொடியை மேலே தூவிவிட்டு கொண்டால் அழகாக இருக்கும்.
ஸ்டிக்கர் பொட்டை ஒருநாளைக்கு மேல் உபயோகிக்கக் கூடாது. ஒரே பொட்டை பல நாள்கள் வைத்தால், தோல் நோய் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
நெற்றியில் ஒரே இடத்தில் பொட்டு வைக்காதீர்கள். மேல், கீழ், வலது, இடது என்று அவ்வப்போது சிறிது நகர்த்தி வைத்தால், பொட்டு வைப்பதால் தோல் ஒவ்வாமை ஏற்படாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.