மகளிர்மணி

உருளைக்கிழங்கு பொரிக்கும்போது இப்படி செய்யுங்கள்!

உருளைக்கிழங்கை பொரிக்கும் முன்பு சிறிது பயத்தம் மாவை உருளைக்கிழங்கு மீது தெளித்தால், பொரியல் மொரமொரப்பாக இருக்கும். -ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

DIN, நெ . இராமகிருஷ்ணன்

உருளைக்கிழங்கை பொரிக்கும் முன்பு சிறிது பயத்தம் மாவை உருளைக்கிழங்கு மீது தெளித்தால், பொரியல் மொரமொரப்பாக இருக்கும். -ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

ரசத்துடன் இரண்டு துண்டு அன்னாசிப்பழம் நறுக்கிப் போட்டு வேகவைக்கும்போது, மிகவும் சுவையாக இருக்கும். -விமலா சடையப்பன், காளனம்பட்டி.

காளான் உணவுகளைத் தயாரித்த நான்கு மணி நேரத்துக்குள் சாப்பிட வேண்டும். மறுநாள் சாப்பிட்டாலோ, சூடுபடுத்திச் சாப்பிட்டாலோ காளானிலுள்ள புரதம் சிதைந்து, இதயத்தைப் பாதிக்கும்.

பீட்ரூட் கறி வகைகளைச் சமைத்தவுடன் மீண்டும் சூடுபடுத்தினால், சத்துகள் அழிந்துவிடும். வயிற்று உபாதைகள் ஏற்படும்.

கீரை உணவுகளை மறுபடியும் சூடுபடுத்தினால், கீரையிலுள்ள நைட்ரஜன் சத்து சிதைந்து நஞ்சாகிவிடும். இதனால் குடல் புற்றுநோய் ஏற்படும்.

பசு வெண்ணெயில் வைட்டமின் ஏ சத்து இருப்பதால், பார்வை குறைபாடு, கண் நோய் நீங்கும்.

காசநோயால் அவதிப்படுவர்களுக்கு வெண்ணெய் மிகவும் நல்லது.

வெண்ணயில் அடங்கியுள்ள கால்சியம் சத்தானது எலும்பு, பற்களுக்கு வலு சேர்க்கிறது. வயோதிகத்தால் வரக் கூடிய எலும்பு நோய்களை வராமல் தடுக்க உதவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

"RSS! விஜய் எச்சரிக்கையாக இருப்பார் என நம்புகிறேன்!"; திருமா | செய்திகள்: சில வரிகளில் | 28.08.25

SCROLL FOR NEXT