மகளிர்மணி

காலி ஃபிளவர் அவியல்

காலிஃபிளவரை சுத்தம் செய்து பூவாக நறுக்கி, வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து பூவைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

காலி ஃபிளவர்- 400 கிராம்

சிறிய உருளைக்கிழங்கு- 200 கிராம்

பச்சைப் பட்டாணி, புளித்த தயிர்- தலா 100 கிராம்

சர்க்கரை- 1தேக்கரண்டி

மஞ்சள் பொடி, மசாலா பொடி, தனியா பொடி- தலா கால் தேக்கரண்டி

சீரகப் பொடி, நெய்- தலா 1 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய்- 5

மிளகாய் பொடி- 1 கரண்டி

செய்முறை:

காலிஃபிளவரை சுத்தம் செய்து பூவாக நறுக்கி, வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து பூவைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். உருளைக்கிழங்கை தோல் சீவித் துண்டுகள் செய்துகொள்ள வேண்டும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து, காய்ந்தவுடன் மஞ்சள் பொடி, சீரகப் பொடி, தனியா பொடி, மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை நன்றாக வதக்கி, உருளைக்கிழங்கைப் போட்டு வதக்க வேண்டும்.

பின்னர், அதில் காலிஃபிளவர், பட்டாணி, சர்க்கரை, உப்பு ஆகியன சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். தயிரில் ஒரு கிண்ணம் தண்ணீர் சேர்த்து அடித்துக் கலக்கி வாணலியில் காய்கறிக் கலவையில் சேர்த்து மூடிவிட வேண்டும். காய்கறிகள் வெந்ததும் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து மசாலா தூள், நெய் சேர்த்துக் கிளறி அடுப்பில் இருக்கும்போது அடிபிடிக்காமல் கிளறி எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் ஸ்டாலின் வருகை: 9 மதுக்கடைகளை மூட உத்தரவு

நரசிம்ம பெருமாள் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பெண் கைது

ராமேசுவரத்தில் நவ. 18-ல் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு! புதிய நீதிக்கட்சித் தலைவருக்கு அழைப்பு!

ஆலங்குடி: 3 மயில்கள் இறப்பு! வனத்துறையினா் விசாரணை!

SCROLL FOR NEXT