முகப்பு
மகளிர்மணி

தட்டைப்பயறு சுண்டல்

தட்டை பயறை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் சிறிது உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.

Updated On : 5 அக்டோபர், 2025 at 12:32 AM
தட்டைப்பயறு சுண்டல்
பகிர்:
Updated On : 4 அக்டோபர், 2025 at 10:13 PM

தேவையான பொருள்கள்:

தட்டைப்பயறு- 100 கிராம்

பொடியாக நறுக்கிய கேரட் , பீன்ஸ், குடை மிளகாய், உருளைக்கிழங்கு- தலா ஒரு மேசைக்கரண்டி மிளகாய்த் தூள்- ஒரு தேக்கரண்டி கடுகு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள்- தலா அரை தேக்கரண்டி

Advertisement

உப்பு எண்ணெய்- தேவையான அளவு

Updated On : 4 அக்டோபர், 2025 at 10:13 PM

செய்முறை:

தட்டை பயறை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் சிறிது உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து வேக வைத்துள்ள தட்டைப் பயறை சேர்க்க வேண்டும். இத்துடன் வேகவைத்த காய்கறி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து லேசாக கிளறி, கொத்தமல்லியை கிள்ளிப் போட்டு இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.