மகளிர்மணி

தினை கொழுக்கட்டை

தினை அரிசியை சுத்தம் செய்து ஊற வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளித்து, 4 கிண்ணம் தண்ணீரைவிட்டுக் கொதிக்க விடவும்.

ஏ.மூர்த்தி

தேவையான பொருள்கள்:

தினை அரிசி - 2 கிண்ணம்

இஞ்சி - 1 சிறிய துண்டு

கடலைப் பருப்பு - அரை மேசைக் கரண்டி

பச்சை மிளகாய் - 4

சீரகம் - அரை மேசைக்கரண்டி

கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

தாளிக்க: கடுகு, உளுந்தம் பருப்பு

செய்முறை:

தினை அரிசியை சுத்தம் செய்து ஊற வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு தாளித்து, 4 கிண்ணம் தண்ணீரைவிட்டுக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்ததும் ஊற வைத்த தினை அரிசியைப் போட்டு நன்றாக வேக வைக்கவும். தேவையான உப்பையும் சேர்த்து நன்றாக வெந்ததும் இறக்கிவிடவும். நன்றாக ஆறியதும் கொழுக்கட்டையைப் போலப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து அவித்து எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைசன் படத்தின் மேக்கிங் விடியோ!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

வாட்ஸ்ஆப், டெலிகிராம்தான் டார்கெட்! 30,000 பேரிடம் ரூ. 1,500 கோடி மோசடி! எந்த நகரம் முதலிடம்?

உத்தரகண்ட் கனமழை: இரண்டு மாதங்களுக்குப் பிறகு 7 பேரின் சடலங்கள் மீட்பு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறியது இவர்தான்!

SCROLL FOR NEXT