மகளிர்மணி

வாழைத்தண்டு கறி

வாழைத்தண்டை நார் நீக்கி, பொடியாக நறுக்கவும். பின்னர், அத்துடன் தேவையான உப்பு, பாசிப் பருப்பு, புளித்த மோர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

தினமணி செய்திச் சேவை

தேவையான பொருள்கள்:

வாழைத் தண்டு- 1 துண்டு

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

கடுகு, உளுந்தம் பருப்பு- தாளிக்க

காய்ந்த மிளகாய்- 3

தேங்காய்த் துருவல். பாசிப் பருப்பு- தலா கால் கிண்ணம்

புளித்த மோர்- சிறிதளவு

செய்முறை:

வாழைத்தண்டை நார் நீக்கி, பொடியாக நறுக்கவும். பின்னர், அத்துடன் தேவையான உப்பு, பாசிப் பருப்பு, புளித்த மோர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, கிள்ளிய மிளகாய் ஆகியவற்றைப் போட்டு, தாளித்து ஊற வைத்துள்ள வாழைத்தண்டைப் பிழிந்து, வாணலியில் போட்டு சிறிதளவு தண்ணீரைவிட்டு, மிதமான தீயில் வேகவிடவும்.

நன்றாக வெந்ததும், தேங்காய்த் துருவலைச் சேர்த்து, நன்றாகக் கிளறி எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலா போகி: திருவள்ளூா் ஆட்சியா் வேண்டுகோள்

திருவள்ளூா் அறிவியல் பூங்காவில் நாளை பொங்கல் விழா

விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT