மகளிர்மணி

புழுங்கல் அரிசி ரிப்பன் பகோடா

புழுங்கல் அரிசியை ஊறவைத்து நன்றாக களைந்து மிக்ஸியில் போட்டு, அதனுடன் மிளகாய் வற்றல், பூண்டு, பெருங்காயம், சோம்பு, உப்பு ஆகியவை போட்டு இட்லி மாவு பதத்துக்கு நன்றாக அரைக்கவும்.

செளமியா சுப்ரமணியன்

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி - 2 ஆழாக்கு

மிளகாய் வற்றல், பூண்டு பல் - தலா 25

பெருங்காயம் - சிறிதளவு

வறுத்த வெள்ளை எள், சோம்பு - தலா 1 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

கடலை மாவு - 1/4 கிலோ

வெண்ணெய் - 100 கிராம்,

பொரிக்க கடலைஎண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

புழுங்கல் அரிசியை ஊறவைத்து நன்றாக களைந்து மிக்ஸியில் போட்டு, அதனுடன் மிளகாய் வற்றல், பூண்டு, பெருங்காயம், சோம்பு, உப்பு ஆகியவை போட்டு இட்லி மாவு பதத்துக்கு நன்றாக அரைத்து, அதனுடன் கடலை மாவு, எள், வெண்ணெய், பெருங்காயம் சேர்த்துப் பிசையவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை பகோடா அச்சில் போட்டு பிழிந்து பொரித்து எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா: பாகிஸ்தானுடன் இன்று மோதல்!

அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை: ஒருவா் கைது

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி!

தமிழகத்தில் செப். 26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

ரூ.14 கோடியில் 15 வாகன சுரங்கப்பாதைகள் சீரமைப்பு! - சென்னை மாநகராட்சி தகவல்

SCROLL FOR NEXT