* தூதுவளை இலைகளை இட்டு கஷாயம் செய்து குடித்து வர மார்புச் சளி குணமாகும்.
* பிரண்டைத் தண்டை பொடியாக நறுக்கி, மிளகு, சீரகம், சுக்கு சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர கை, கால், மூட்டு வலி குணமாகும்.
-உ.இராமநாதன், நாகர்கோவில்.
* மணத்தக்காளியானது நெஞ்சுச் சளி, இருமல், இளைப்பைப் போக்கும்.
* குறைந்த ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு பூண்டு சிறந்த நிவாரணியாகும்.
* வாழைப்பூவை தயிரில் கலந்து சாப்பிட்டால், ரத்தப் பேதி, சீதபேதி, பெரும்பாடு, மாதவிலக்கு, வயிற்று வலி ஆகியன குணம் அடையும்.
-முக்கிமலை நஞ்சன்
* தாய்ப்பால் சரியாகச் சுரக்காதவர்கள் காலை, மாலை தலா ஒரு பேரிக்காயைச் சாப்பிட்டால், தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
* வாழைத்தண்டை நறுக்கும்போது கிடைக்கும் நாரை வீசி எறியாமல் விளக்குக்குத் திரியாகப் பயன்படுத்தலாம்.
* பல் ஈறு வீங்கி வலி ஏற்பட்டால், நெல்லிக்காயை நசுக்கி ஈறுகளில் தேய்த்தால் வலி நின்றுவிடும்.
* பூசணிச்சாறை செம்பருத்திப் பூவுடன் சாப்பிட்டு வந்தால் நீர்த்தாரை எரிச்சல் குணமாகும்.
* முளைக்கீரையை வாரம் ஒரு நாள் தொடர்ந்து சாப்பிட்டால் நரை குணமாகும்.
* நாவல் பழம், பாகற்காய், அவரைக்காய்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
-விமலா சடையப்பன், காளனம்பட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.