மகளிர்மணி

தக்காளி குழம்பு

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காயைப் போட்டு... பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்

தினமணி செய்திச் சேவை

தேவையான பொருள்கள்:

நாட்டுத் தக்காளி, பெங்களூரு தக்காளி - தலா 2 (மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும் அல்லது பொடியாக நறுக்கவும்)

கீறிய பச்சை மிளகாய் - 1

பூண்டு - 2 பல்

பொடியாக நறுக்கிய தேங்காய் -

சிறிதளவு

சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - ஒன்றரை தேக்கரண்டி

மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி

தனியாத்தூள் - 2 தேக்கரண்டி

கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)

கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காயைப் போட்டு... பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். தீயைக் குறைத்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரைத்த தக்காளி விழுது (அ) பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்துமல்லி தூவி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேகமாக செல்லும் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்...! பட்ஜெட் குறித்து மோடி!

ஒரு ஆண்டில் எத்தனை இ-செலான் பெற்றால் ஓட்டுநருக்கு ஆபத்து?

பட்ஜெட் எதிர்பார்ப்பு! தங்கம் விலையைக் குறைக்கும் திட்டம் இருக்குமா?

144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு - ஒரு அலசல்

அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம்! சாலைகளில் மலர்தூவி மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT