முகப்பு
சிறுவர்மணி

விடுகதைகள்

1. சருகுச் சேலைக்காரி சமையலுக்கு உதவுவாள். அவள் யார்? 2. கோடையில் சுற்றி வரும்; வாடையில் முடங்கி விடும். அது என்ன? 3. கொலுவிலும் இருக்கும்,  குழந்தையிடமும் இருக்கும். அது என்ன? 4. கையை வெட்டுவார்; கழு

Updated On : 25 டிசம்பர், 2023 at 2:58 PM
பகிர்:

1. சருகுச் சேலைக்காரி சமையலுக்கு உதவுவாள். அவள் யார்?

2. கோடையில் சுற்றி வரும்; வாடையில் முடங்கி விடும். அது என்ன?

3. கொலுவிலும் இருக்கும்,  குழந்தையிடமும் இருக்கும். அது என்ன?

4. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்?

5. கூடவே வருவான். ஆனால் பேசமாட்டான். யார் அவன்?

6. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?

7. குட்டிப் போடும். ஆனால் எட்டிப் பறக்கும். அது என்ன?

8. கிளை இல்லா மரம் வெட்ட வெட்ட வளரும். அது என்ன?

9. கடிபடமாட்டான் பிடிபடமாட்டான். அவன் யார்?

10. ஓட்டுக்குள்ளே வீடு; வீட்டுக்குள்ளே கூடு. அது என்ன?

விடைகள் :

1. வெங்காயம்

2. மின்விசிறி

3. பொம்மை

4. தையல்காரர்

5. நிழல்

6. படகு

7. வெளவால்

8. தலைமுடி

9. தண்ணீர்

10. நத்தை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.