சிறுவர்மணி

சிறுவர் பாடல்: பட்டாம்பூச்சி

பட்டாம் பூச்சி பறக்கிறது -உயிர்ப் பூவின் இதழைத் திறக்கிறது! பட்டுப் போன்ற சிறகாலே -தினம் பறந்து துயரம் மறக்கிறது! மொட்டின் மேலே அமர்கிறது -அதில் மூழ்கி வாசம் நுகர்கிறது! வட்டம் போட்டுப் பறந்தபடி -தேன்

அ. சரவணராஜ்

பட்டாம் பூச்சி பறக்கிறது -உயிர்ப்

பூவின் இதழைத் திறக்கிறது!

பட்டுப் போன்ற சிறகாலே -தினம்

பறந்து துயரம் மறக்கிறது!

மொட்டின் மேலே அமர்கிறது -அதில்

மூழ்கி வாசம் நுகர்கிறது!

வட்டம் போட்டுப் பறந்தபடி -தேன்

வாரிக் குடித்து நகர்கிறது!

சிறகால் உலகை அளக்கிறது -தன்

ஜீவனை மகிழ்வாய் வளர்க்கிறது!

சுறுசுறுப்பாகத் தினம் பறந்து -நறுஞ்

சோலையில் பூப்போல் கலக்கிறது!

வண்ணம் சுமந்து வாழ்கிறது -தன்

வனப்பால் உலகை ஆள்கிறது!

மண்ணில் சொர்க்கம் கண்டதுபோல் -அது

மலரின் மடியில் வீழ்கிறது!

பட்டாம் பூச்சி போலிருப்போம் -தினம்

பகலும் இரவும் மகிழ்ந்திருப்போம்!

கிட்டா இன்பம் கிட்டுமென -நாம்

காலையில் சுகமாய்க் கண்விழிப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி செங்கோட்டை அருகே வெடித்த கார்: விபத்தா? சதிச்செயலா?

புத்துணர்வு... மாலத்தீவுக் கடல்... ராய் லட்சுமி!

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் 2-வது காலாண்டு லாபம் உயர்வு!

ஜம்மு - காஷ்மீரில் 2,900 கிலோ வெடிப்பொருள் பறிமுதல்: தாக்குதல் திட்டம் முறியடிப்பு

அமெரிக்காவில் வாழ்வோருக்கு 2000 டாலர்கள்: டிரம்ப் | செய்திகள்: சில வரிகளில் | 10.11.25

SCROLL FOR NEXT