சிறுவர் பாடல்: பயணம்
பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி பயணம் எங்கே சொல்வாயோ? சின்னத் தம்பி சின்னத் தம்பி மலரைத் தேடிச் செல்கின்றேன் வானம்பாடி வானம்பாடி பயணம் எங்கே சொல்வாயோ? சின்னத் தம்பி சின்னத் தம்பி வான்முகில் தேடிச் செல்க
பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி
பயணம் எங்கே சொல்வாயோ?
சின்னத் தம்பி சின்னத் தம்பி
மலரைத் தேடிச் செல்கின்றேன்
வானம்பாடி வானம்பாடி
பயணம் எங்கே சொல்வாயோ?
சின்னத் தம்பி சின்னத் தம்பி
வான்முகில் தேடிச் செல்கின்றேன்
மாடப் புறாவே மாடப் புறாவே
பயணம் எங்கே சொல்வாயோ?
சின்னத் தம்பி சின்னத் தம்பி
மணிக்கூண்டு தேடிச் செல்கின்றேன்
வண்ணக் கிளியே வண்ணக் கிளியே
பயணம் எங்கே சொல்வாயோ?
சின்னத் தம்பி சின்னத் தம்பி
வனத்தில் உலவச் செல்கின்றேன்
பாட்டுக் குயிலே பாட்டுக் குயிலே
பயணம் எங்கே சொல்வாயோ?
சின்னத் தம்பி சின்னத் தம்பி
தனிமையை நாடிச் செல்கின்றேன்!