முகப்பு
சிறுவர்மணி

சிறுவர்பாடல்: குழந்தை

சின்ன முல்லை மொட்டு சிறகு  முளையாச் சிட்டு கன்னம் தங்கத் தட்டு கரிய புருவக் கட்டு! மின்னல் கண்ணின் வெட்டு மேனி காஞ்சிப் பட்டு பின்னும் காலின் எட்டு பேச்சு தேனின் சொட்டு! துன்ப இருளைத் தொட்டு துடைத்து

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:09 PM
பகிர்:

சின்ன முல்லை மொட்டு

சிறகு  முளையாச் சிட்டு

கன்னம் தங்கத் தட்டு

கரிய புருவக் கட்டு!

மின்னல் கண்ணின் வெட்டு

மேனி காஞ்சிப் பட்டு

பின்னும் காலின் எட்டு

பேச்சு தேனின் சொட்டு!

துன்ப இருளைத் தொட்டு

துடைத்து எறிந்து விட்டு

இன்பம் விளையும் மட்டு

இசைக்கும் மழலை மெட்டு!

அன்னை மனத்தைப் பித்து

ஆக்கப் பிறந்த முத்து

நன்னம்பிக்கை வித்து

நாட்டின் உயர்ந்த சொத்து!

முழு கட்டுரையைப் படிக்க →