சிறுவர்மணி

ரஷ்ய நாடோடிக் கதை: அக்கா மாஷாவும், குட்டித் தம்பி இவானும்..!

ன்னொரு காலத்தில் ஒரு முதியவரும் ஒரு மூதாட்டியும் வசித்து வந்தனர். அவர்களின் மூத்த மகள் மாஷா.இளைய மகன் பெயர் இவான். பெற்றோர்கள் விரைவிலேயே இறந்து விட்டதால் மாஷாவும் இவானும் அனாதைகளாயினர். ÷ஒரு நாள் மாஷ

கலைவாணி

ன்னொரு காலத்தில் ஒரு முதியவரும் ஒரு மூதாட்டியும் வசித்து வந்தனர். அவர்களின் மூத்த மகள் மாஷா.இளைய மகன் பெயர் இவான். பெற்றோர்கள் விரைவிலேயே இறந்து விட்டதால் மாஷாவும் இவானும் அனாதைகளாயினர்.

÷ஒரு நாள் மாஷா வயலில் வேலை செய்யப் புறப்பட்டாள். தன்னுடன் இவானையும் அழைத்துச் சென்றாள். அவர்கள் வெகுதூரம் செல்ல வேண்டியிருந்தது.வழியில் ஒரு பெரிய புல் வெளியைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. சிறிது நேரத்தில் இவானுக்கு தாகமெடுத்தது.

÷""எனக்கு மிகவும் தண்ணீர்த் தாகமாக இருக்கிறது அக்கா'' என்றான் இவான்.

÷""கொஞ்சம் பொறு தம்பி, நாம் சீக்கிரமே ஒரு கிணற்றை அடைந்துவிடுவோம்'' என்று மாஷா பதில் சொன்னாள்.

÷அவர்கள் சென்றனர். வெகுநேரம் நடந்து நடந்து மிகவும் களைப்படைந்தனர். சூரியன் கடுமையாகச் சுட்டெரித்தது. ஆனால் எங்குமே கிணறு ஒன்றும் தென்படவில்லை. தேடிப் பயனில்லை என்று அவர்களுக்கு நன்றாகத் தெரிந்தது.

÷விரைவில் அவர்கள் மாட்டுத் தொழுவம் ஒன்றை அடைந்தனர். அங்கு நீர் நிரம்பிய தொட்டி ஒன்று இருந்தது.

÷""நான் அதிலிருந்து கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொள்கிறேன் அக்கா'' என்றான் இவான்.

÷""ஓ,வேண்டாம் தம்பி. அப்படிச் செய்தால் நீ ஒரு கன்றுக்குட்டியாக மாறிவிடுவாய்'' என்று சொன்னாள் மாஷா.

÷அவள் சொன்னதை ஏற்றுக் கொண்டான் இவான். அவர்கள் நடந்தனர். மிகவும் வெப்பமாகவும் களைப்பாகவும் இருந்தது. சூரிய வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அந்த இடங்களில் கிணறு இருப்பதாகவே தோன்றவில்லை. நடக்க முடியாமல் சிரமப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர்.

÷அவர்கள் விரைவில் ஒரு குதிரை லாயத்தை அடைந்தனர். அங்கே ஒரு தொட்டியில் நீர் நிரம்பியிருந்தது.

÷""நான் அந்தத் தொட்டியிலிருந்து கொஞ்சம் தண்ணீர் குடித்துக் கொள்கிறேன் அக்கா. தாகத்தால் நாக்கு வறண்டுவிட்டது'' என்றான் இவான்.

 ""ஓ,அதுபோலச் செய்யக் கூடாது தம்பி. அப்படிச் செய்தால் நீ ஒரு குதிரைக் குட்டியாக மாறிவிடுவாய்'' என்று மாஷா தடுத்தாள்.

÷இவான் பெருமூச்சுவிட்டான். என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தனர்.

÷களைப்பால் உடல் தளர்ந்தது. வெப்பத்தால் உடலே பற்றி எரிவது போலிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கிணறோ மற்ற நீர் நிலைகளோ இருப்பதாகத் தோன்றவில்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் பிடித்தபடி தயங்கித் தயங்கி நடந்தனர்.

÷சிறிது தூரம் நடந்த பிறகு அவர்கள் ஒரு ஆட்டுப் பட்டியை அடைந்தனர். அங்கே நீர் நிரம்பிய தொட்டி ஒன்று இருந்தது.

÷""நான் கொஞ்சம் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் அக்கா. இனிமேல் என்னால் தாங்க முடியாது'' என்று கெஞ்சினான் இவான்.

÷""ஓ,அதுபோலச் செய்யக் கூடாது தம்பி. அப்படிச் செய்தால் நீ ஒரு ஆட்டுக் குட்டியாக மாறிவிடுவாய்.''

÷ஆனால் அக்கா சொன்னதை இவான் கேட்கவில்லை. அவன் ஆட்டுப் பட்டியிலிருந்த தொட்டியிலிருந்து கொஞ்சம் தண்ணீர் குடித்தான். தண்ணீர் குடித்த உடனேயே அவன் ஒரு சிறிய வெள்ளை நிற ஆட்டுக் குட்டியாக மாறிவிட்டான்.

÷மாஷா தன் சகோதரனைப் பெயர் சொல்லி அழைத்தாள். ஆனால் இவானுக்குப் பதிலாக அந்த வெள்ளை நிற ஆட்டுக்குட்டிதான் ஓடி வந்தது.

÷குமுறி அழுதாள் மாஷா. அவள் ஒரு வைக்கோல் போரின் அருகே அமர்ந்து தேம்பித் தேம்பி அழுதாள். ஆட்டுக்குட்டி அவளைச் சுற்றி துள்ளிக் குதித்து விளையாடியது.

÷அந்த வழியே ஒரு இளைஞன் குதிரையில் வந்து கொண்டிருந்தான். மாஷாவிடம் கேட்டான் அவன்:

÷""ஏ,அழகான பெண்ணே நீ ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?''

÷மாஷா அவனிடம் நடந்ததையெல்லாம் சொன்னாள்.

÷""நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் பெண்ணே. நான் உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வேன். இந்தச் சின்னஞ் சிறிய ஆட்டுக் குட்டியும் நம்முடன் இருக்கட்டும் என்றார் இளைஞன்.''

÷மாஷாவும் அவனை மணக்கச் சம்மதித்தாள். அவர்கள் விரைவிலேயே திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். சிறிய ஆட்டுக் குட்டியும் அவர்களுடன் வசித்தது. மாஷா ஆட்டுக் குட்டியை தன் உயிருக்கு உயிராக போற்றி வளர்த்தாள். ஆட்டுக் குட்டி அவள் தட்டிலேயே உணவு உண்டது. அவள் குவளையிலேயே நீர் பருகியது.

÷ஒரு நாள் இளைஞன் வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து அங்கே வந்தாள் ஒரு சூனியக்காரி. அவள் மாஷாவிடம் மிகவும் அன்பாகக் கேட்பது போல் கேட்டாள்: ÷""அன்பான மாஷா,பக்கத்தில் ஒரு அழகான ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கே சென்று குளிக்கலாம் வா.''

÷மாஷாவும் அதற்குச் சம்மதித்தாள். ஆற்றிற்குச் சென்றதும் மாஷாவின் மீது பாய்ந்தாள் சூனியக்காரி. அவள் மீது ஒரு கல்லைக் கட்டி அவளை அந்த ஆற்றினுள் தூக்கி எறிந்தாள். பிறகு மாஷாவைப் போலவே தன்னை மாற்றிக் கொண்டாள். அவளைப் போலவே உடையணிந்துகொண்டு, மாஷாவிற்குப் பதிலாக தானே மாஷாவின் வீட்டிற்குச் சென்றாள். அவள் உண்மையான மாஷா இல்லையென்று யாருக்குமே தெரியவில்லை. அந்த இளைஞனால்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

÷நடந்தது என்னவென்று அந்த ஆட்டிற்கு மட்டும் தெரிந்திருந்தது. அது துயரத்துடன் தலையைத் தொங்கவிட்டபடியே அமர்ந்திருந்தது. உணவு சாப்பிட மறுத்தது. எப்போதும் ஆற்றங்கரையில் நின்றபடி தன் தமக்கையை ஏக்கத்துடன் அழைத்தது:

÷""மாஷா,என் அன்பான சகோதரியே,நான் அழைப்பது உனக்குக் கேட்கிறதா? நீந்திக் கரைக்கு வந்துவிடு. நீந்திக் கரைக்கு வந்துவிடு.''

÷இதைத் தெரிந்துகொண்ட சூனியக்காரி, அந்த ஆட்டுக்குட்டியை கொன்றுவிடலாம் என்று தன் கணவனிடம் சொன்னாள்.

÷ஆனால் இளைஞன் அதை ஒப்புக் கொள்ளவில்லை. ஏனென்றால் அந்த ஆட்டுக் குட்டியின் மீது அவன் மிகுந்த அன்பு வைத்திருந்தான். ஆட்டுக்குட்டி இப்படித் துயரமாக இருக்கிறதே என்று நினைத்து வருந்தினான். ஆனால் சூனியக்காரி திரும்பத் திரும்பச் சொல்லி அவனைச் சம்மதிக்க வைத்தாள்.

÷கடைசியில், ""நீயே அந்த ஆட்டைக் கொன்றுவிடு...'' என்று கூறினான் அவன்.

÷பிறகு அந்தச் சூனியக்காரி பெரிய அடுப்பை மூட்டினாள். ஆட்டை சமைத்துச் சாப்பிடுவதற்காக அடுப்பின் மீது பெரிய பாத்திரங்களை வைத்தாள். கத்திகளும் கூர் தீட்டப்பட்டன. ÷தன் முடிவு நெருங்கிவிட்டதைத் தெரிந்துக் கொண்ட ஆட்டுக்குட்டி இளைஞனிடம் கேட்டது:

÷""நீங்கள் எனக்குத் தந்தை போன்றிருந்தீர்கள். எனது கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள். நான் சாவதற்கு முன்பு அந்த ஆற்றிற்குச் செல்ல அனுமதி கொடுங்கள். அங்கே நான் சிறிது நீர் அருந்திவிட்டு வந்து விடுகிறேன்.''

÷ஆட்டுக்குட்டி ஆற்றிற்குச் செல்ல அனுமதி கொடுத்தான் இளைஞன். ஆட்டுக்குட்டி ஆற்றை நோக்கி ஓடியது. கரையில் நின்றுக் கொண்டு பரிதாபமான குரலில் அழைத்தது.

÷""என் சகோதரியே மாஷா,நான் அழைப்பது உனக்குக் கேட்கிறதா?

    நீந்தி வெளியே வா...நீந்தி வெளியே வா...

    பெரிய நெருப்பு எரிகிறது...

    பெரிய பானைகள் கொதிக்கின்றன...

    என்னைக் கொள்ளத் தயாராக

    பெரிய கத்திகள் இருக்கின்றன...''

÷ஆற்றுக்குள்ளிருந்து மாஷாவும் பதில் சொன்னாள்:

      ""அன்புத் தம்பியே இவான்,நான் சொல்வது உனக்குக் கேட்கிறதா?

       கனத்த கல் என்னை அழுத்துகிறது...

       புற்களில் காலும் சிக்கியதே...

       நெஞ்சில் மணலும் படிந்ததுவே''

÷அந்த சூனியக்காரி ஆட்டுக்குட்டியைப் பார்ப்பதற்காகச் சென்றாள். ஆட்டுக்குட்டி எங்கே இருக்கிறதென்று அவளால் கண்டுபிடிக்க முடியவல்லை. எனவே அதைத் தேடுவதற்கு ஒரு வேலைக்காரனை அனுப்பினாள். வேலைக்காரன் ஆற்றிற்குச் சென்று பார்த்தான். ஆற்றங்கறையில் அந்த ஆட்டுக்குட்டி பரிதாபமாகக் கத்தியபடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது.

      ""என் சகோதரியே மாஷா, நான் அழைப்பது உனக்குக் கேட்கிறதா?

        நீந்தி வெளியே வா... நீந்தி வெளியே வா...

        பெரிய நெருப்பு எரிகிறது...

        பெரிய பானைகள் கொதிக்கின்றன...

         என்னைக் கொள்ளத் தயாராக

        பெரிய கத்திகள் இருக்கின்றன...''

 ஆற்றுக்குள்ளிருந்து மாஷாவும் பதில் சொன்னாள்:

        ""அன்புத் தம்பியே இவான், நான் சொல்வது உனக்குக் கேட்கிறதா?

        கனத்த கல் என்னை அழுத்துகிறது...

        புற்களில் காலும் சிக்கியதே...

        நெஞ்சில் மணலும் படிந்ததுவே...''

÷அந்த வேலைக்காரன் வீட்டிற்கு ஓடினான். தான் கண்டதையும் கேட்டதையும் இளைஞனிடம் கூறினான். மக்கள் ஒன்று சேர்ந்தார்கள்.

அவர்கள் அனைவரும் ஆற்றுக்கு ஒடினார்கள். வலை வீசி மாஷாவை வெளியே கொண்டு வந்தார்கள். அவள் கழுத்தில் கட்டியிருந்த கல்லை அகற்றிவிட்டு புதிய ஆடைகளை அணிவித்தார்கள். சின்னஞ் சிறிய ஆட்டுக்குட்டி திடீரென்று இவானாக மாறியது. மாஷா மீண்டும் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினாள். முன்பு இருந்ததை விடவும் இப்போது மிகவும் அழகாக இருந்தாள். பிறகு அந்தத் கெட்ட சூனியக்காரி எங்கோ ஓடி மறைந்தாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT