சிறுவர்மணி

சிறுவர்பாடல்: கடிகாரம்!

டிக்டிக் டிக்டிக் கடிகாரம் டிங்டாங் டிங்டாங் மணி ஆடும்! நேரம் சொல்லும் கடிகாரம் நில்லாதோடும் தினந்தோறும்! இருவர் துரத்தி விளையாடும் எண்கள் குறித்த மைதானம்! முள்ளில் காலம் நடக்கிறது முணுமுணுப்போடு கடக்

மலர் மகன்

டிக்டிக் டிக்டிக்

கடிகாரம்

டிங்டாங் டிங்டாங்

மணி ஆடும்!

நேரம் சொல்லும்

கடிகாரம்

நில்லாதோடும்

தினந்தோறும்!

இருவர் துரத்தி

விளையாடும்

எண்கள் குறித்த

மைதானம்!

முள்ளில் காலம்

நடக்கிறது

முணுமுணுப்போடு

கடக்கிறது!

காலம் காட்டும்

கடிகாரம் - நம்

கடமை கூறும்

கடிகாரம்!

டிக்டிக் டிக்டிக்

கடிகாரம்

டிங்டாங் டிங்டாங்

மணி ஆடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகள் மீட்பாளர்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சலுடன் கூடிய வலி நீங்க...

ஜெமினி கணேசன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 43

பேல்பூரி

சாக்லெட்

SCROLL FOR NEXT