பள்ளியை விட்டு வந்தேனா?
பட்டப் பகலும் மங்கினதா?
உள்ளே வீட்டில் நுழைந்தேனா?
உள்ள சுவடியை வைத்தேனா?
பிள்ளைகள் எல்லாம் வந்தாரா?
பெரிய தெருவில் சேர்ந்தோமா?
வெள்ளி நிலாவும் வந்ததே!
விளையா டும்படி சொன்னதே!
ஓடித் தொட்டோம் ஓர் ஆளை!
ஒளியும் ஆட்டம் ஆடினோம்!
பாடி நடந்தோம் எல்லோரும்!
பச்சைக் கொடிக்கு நீர்விட்டோம்!
தேடிக் கள்ளனைப் பிடித்தோம்!
சிட்டாய்ப் பறந்தோம் வீட்டுக்கே!
ஆடச் செய்தது வெண்ணிலா!
அழகைச் செய்தது வெண்ணிலா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.