சிறுவர்மணி

நம்மைச் சுற்றி நடப்பது என்ன? - 7: ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள்

உங்கள் பகுதியில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றிப் பார்ப்போம். இவையெல்லாம் நீங்கள் கவனமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்

கூத்தலிங்கம்

உங்கள் பகுதியில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றிப் பார்ப்போம். இவையெல்லாம் நீங்கள் கவனமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்தான்.

ஊராட்சி ஒன்றியத்தின் வார்டுகளிலிருந்து ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதாவது இரண்டு பெரிய கிராமங்கள் சேர்ந்ததுதான் ஒரு ஊராட்சி ஒன்றிய "வார்டு' ஆகும். சிறிய கிராமங்களாக இருந்தால் நான்கு அல்லது ஐந்து குக்கிராமங்கள் சேர்ந்தது ஒரு வார்டு ஆகும். இப்படி வைத்துக்கொள்ளலாம், ஏறத்தாழ மூவாயிரம் வாக்காளர்கள் கொண்ட பகுதி ஒரு வார்டு. இங்கிருந்து, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த உறுப்பினர் தன் வார்டு மக்களின் தேவைகளை அறிந்து, அந்தத் தேவைகளை நிறைவேற்றுபவராக இருப்பார். தன் வார்டு வளர்ச்சிக்கான திட்டங்களை இவர் ஊராட்சி ஒன்றியத் தலைவரிடம் கேட்டுப் பெற்று, அந்தத் திட்டங்களைத் தன் வார்டு மக்களுக்காகச் செயல்படுத்துவார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் ஊர்களில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஒதுக்கீடு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தமது மக்களுக்கான குறைகளைத் தீர்ப்பவர்களாகவும், அந்த வார்டின் ஒட்டு மொத்த நலனைக் கருத்தில்கொண்டு செயல்படுபவர்களாகவும் விளங்குவார்கள்.

அதுபோல சில வார்டுகளில் ஒதுக்கீடு மூலம் பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தப் பெண் உறுப்பினர்கள், தங்கள் வார்டில் உள்ள பெண்களது நலத்தைப் பேணுவதை முக்கியமாக எடுத்துக்கொண்டு செயல்படுவார்கள். அதே நேரத்தில் அவர்கள் அந்த வார்டின் ஒட்டு மொத்த நலனையும் கவனத்தில்கொண்டு செயலாற்றுவார்கள்.

ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள். இந்த ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள்தான் ஊராட்சி ஒன்றியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். பல ஊராட்சி ஒன்றிய வார்டுகள் சேர்ந்ததுதான் ஒரு ஊராட்சி ஒன்றியம். அதாவது, இப்படி வைத்துக்கொள்ளலாம். ஏறத்தாழ முப்பது கிராமங்கள் (கிராம ஊராட்சிகள்) சேர்ந்தது ஒரு ஊராட்சி ஒன்றிய அமைப்பு. கிராமங்களின் இந்த எண்ணிக்கை சில பகுதிகளில் கூடவோ, குறையவோ செய்யலாம்.

ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களின் (வார்டு உறுப்பினர்கள்) செயல்பாடுகளைப் பற்றியும், அவர்களது கடமைகளைப் பற்றியும் நாம் அடுத்த வாரம் பார்ப்போம். அதற்கிடையில் நீங்கள், உங்கள் பகுதியின் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் யார் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாமே. அத்துடன், உங்களது ஊராட்சி ஒன்றிய அமைப்பின் தலைமை இடம் எது என்பதையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்! மேலும், உங்களது வார்டு உறுப்பினர் என்னென்ன நலத் திட்டங்களை உங்கள் பகுதியில் செயல்படுத்தியிருக்கிறார் என்பதையும் தெரிந்துகொள்வது நல்லதுதானே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT