சிறுவர்மணி

நம்மைச் சுற்றி நடப்பது என்ன? - 11: ஊராட்சி ஒன்றியத் தலைவர்

ஊராட்சி ஒன்றியத் தலைவர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதைப் பற்றி நாம் இங்கே தெரிந்துகொள்வோம்.    நாம் இதற்கு முன்பு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (வார்டு கவுன்சிலர்) என்ற பதவியைப் பற்றி அறி

கூத்தலிங்கம்

ஊராட்சி ஒன்றியத் தலைவர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதைப் பற்றி நாம் இங்கே தெரிந்துகொள்வோம்.   

நாம் இதற்கு முன்பு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (வார்டு கவுன்சிலர்) என்ற பதவியைப் பற்றி அறிந்திருக்கிறோம். அதுபோன்ற ஏதாவது ஒரு ஊராட்சி ஒன்றிய வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியத் தலைவராகப் போட்டியிடுவார். அதற்கும் இட ஒதுக்கீடு உண்டு. ஒரு ஊராட்சி ஒன்றியத் தொகுதி, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் ஒதுக்கப்பட்டிருந்தால் அங்கு அந்த சமூகத்தைச் (ஆதி திராவிடர், பழங்குடியினர்) சேர்ந்தவர் மட்டும் போட்டியிட்டு ஊராட்சி ஒன்றியத் தலைவராக ஆக முடியும். அதுபோல சில இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். அங்கு பெண்கள் மட்டுமே ஊராட்சி ஒன்றியத் தலைவராகப் போட்டியிட முடியும்.

   தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பவர்கள் யார்?

   ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அமைப்பிலும் பல வார்டு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள் என்பதை முன்பே அறிந்திருப்பீர்கள். அந்த வார்டு கவுன்சிலர்கள் (ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்) ஊராட்சி ஒன்றியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

   தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர் குறிப்பிட்ட ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால் அந்தக் கட்சியின் சின்னம் அவருக்கு ஒதுக்கப்படும். சிலர் சுயேச்சையாகவும் போட்டியிடுவார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு சின்னம் ஒதுக்கப்படும்.

   ஊராட்சி ஒன்றியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அரசியல் சாசன விதிகளுக்கு ஏற்றவாறு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுவார்.

   ஊராட்சி ஒன்றியத் தலைவர் அந்தத் தொகுதியின் அனைத்து மக்களுக்கும் நேர்மையாகவும் பாரபட்சம் இன்றியும் கடமையாற்ற வேண்டும்.

   அந்தத் தலைவர் ஒழுங்கு தவறும் பட்சத்தில் என்ன செய்வது?

   ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து, தலைவரைப் பதவியிலிருந்து அகற்றவும் வழி இருக்கிறது. ஆனால் அதற்குரிய சட்டத்தில் பல விதிமுறைகள் உள்ளன.

 அதனால் தமது கடமையை உணர்ந்து ஊராட்சி ஒன்றியத் தலைவர் பொறுப்புடன் செயல்படுவார்.

   ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அமைப்பிற்கும் ஒரு தலைவர் இருப்பார் அல்லவா? அவர் மக்களின் பிரதிநிதி.

   ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அமைப்பிற்கும் ஆணையர் என்னும் ஒரு அரசாங்க அதிகாரி இருப்பார். இவர் அரசாங்கத்தின் பிரதிநிதி.

   தலைவரும், ஆணையரும் ஊராட்சி ஒன்றிய அமைப்பிற்கு இரண்டு கண்களைப்போன்றவர்கள். நிர்வாகத்தில், தலைவரின் கட்டுப்பாட்டில் ஆணையர் பணியாற்றுவார். ஆனால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றுவார்கள். தலைவர் ஏற்பாடு செய்யும் ஊராட்சி ஒன்றியக் கூட்டங்களில் ஆணையர் கலந்துகொண்டு தம் கருத்துக்களைச் சொல்லலாம்.

 ஆனால், தீர்மானம் கொண்டு வருவதற்கான உரிமை ஆணையருக்குக் கிடையாது.   நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை செயல்படுத்துவதில் ஆணையர் அக்கறை காட்டுவார். அரசாங்கத்தின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ஊராட்சி ஒன்றியத்தின் வழியாக நடைபெறுகின்றன அல்லவா? அவற்றைச் செயல்படுத்துவதில் அதிக முனைப்புடன் ஆணையர் ஈடுபடுவார்.

 ஆக, ஊராட்சி ஒன்றிய அமைப்பின் வளர்ச்சிக்கு அதன் தலைவரும் ஆணையரும் இணைந்து செயல்படுவார்கள். வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்துவார்கள்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT