முகப்பு
சிறுவர்மணி

சாக்ரடீசின் பொன்மொழிகள்

1. ஆழ்ந்து சிந்தித்து, நீங்களே முடிவு செய்து செயல்படுங்கள்! 2. நேர்மை என்பது செய்யும் செயலைப் பொறுத்தது; உண்மையைப் பேசி உண்மையாக நடப்பது மட்டுமே நேர்மையாகாது! 3. நீதி வேறு, நட்பு வேறு; இரண்டையும் ஒன்ற

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:40 PM
பகிர்:

1. ஆழ்ந்து சிந்தித்து, நீங்களே முடிவு செய்து செயல்படுங்கள்!

2. நேர்மை என்பது செய்யும் செயலைப் பொறுத்தது; உண்மையைப் பேசி உண்மையாக நடப்பது மட்டுமே நேர்மையாகாது!

3. நீதி வேறு, நட்பு வேறு; இரண்டையும் ஒன்றாகக் கருதி செயல்படக்கூடாது!

4. உடல் அழகைவிட உள்ளத்தின் அழகே உண்மை அழகு!

5. தோல்வியை ஒப்புக் கொள்வது பெருந்தன்மை; எனவே தோல்வியை ஒப்புக்கொள்ள அச்சம் கொள்ளக்கூடாது.

6. தான் செய்த தவறை ஒப்புக் கொள்கிறவனே, நல்லவர்களில் முதலாமவனாக எண்ணப்படுவான்.

7. தீங்கிழைத்தவருக்குத் தீங்கு செய்வதும் பழிக்குப் பழி வாங்குவதும் சரியல்ல!

8. சாவதற்கு ஒருபோதும் அஞ்சக்கூடாது; ஆனால் அநீதிக்கு அஞ்ச வேண்டும்!

9. சூழ்ச்சி செய்வோருக்கும் மனக்

கசப்புடன் பழகுவோருக்குமிடையில் வாழ்வதைக் காட்டிலும் இறப்பதே மேல்!

10. மற்றவர்கள் புகழும் பெருமையும் அடைவதற்குத் துணையாக இருக்க வேண்டுமேயொழிய, தமக்கென்று எவ்விதப் புகழையும் விரும்பக்கூடாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.