குழந்தைப் பாடல்: தலையாட்டி பொம்மை!
தஞ்சா ஊரில் வாங்கியது தலையை ஆட்டும் பொம்மையிது கொஞ்சம் ஆட்டி விட்டாலோ குலுங்கிக் குலுங்கி ஆடுமிது. தானே ஆட்டம் போடாது தப்புத் தண்டா செய்யாது உண்ணத் தின்னக் கேட்காது உறங்கிச் சோம்பல் காட்டாது. மண்ணால்
Updated On : 2 ஜனவரி, 2024 at 9:44 PM
தஞ்சா ஊரில் வாங்கியது
தலையை ஆட்டும் பொம்மையிது
கொஞ்சம் ஆட்டி விட்டாலோ
Advertisement
குலுங்கிக் குலுங்கி ஆடுமிது.
தானே ஆட்டம் போடாது
தப்புத் தண்டா செய்யாது
உண்ணத் தின்னக் கேட்காது
உறங்கிச் சோம்பல் காட்டாது.
மண்ணால் செய்த பொம்மையிது
மலிவு விலையில் வாங்கியது
வண்ணக் கலவை தீட்டியதால்
வாங்கத் தூண்டும் பொம்மையிது.
தாத்தா பாட்டி போலத்தான்
தலையை ஆட்டிச் சிரிப்பூட்டும்
சோகம் கொண்ட மனிதரையும்
சுகமாய் மாற்றி மகிழ்வூட்டும்.