முகப்பு
சிறுவர்மணி

தெரியுமா?

கத்தரிக்கோல் கைக்குக் கிடைத்தால் என்ன செய்வேன் தெரியுமா? கட்டுக் கட்டாய் வண்ணத்தாளை வெட்டிக் குவிப்பேன் புரியுமா? குவித்து வைத்த வண்ணத்தாளை என்ன செய்வேன் தெரியுமா? கயிற்றின் மீது வரிசையாக ஒட்டிவைப்பேன

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:53 PM
பகிர்:

கத்தரிக்கோல் கைக்குக் கிடைத்தால்

என்ன செய்வேன் தெரியுமா?

கட்டுக் கட்டாய் வண்ணத்தாளை

வெட்டிக் குவிப்பேன் புரியுமா?

குவித்து வைத்த வண்ணத்தாளை

என்ன செய்வேன் தெரியுமா?

கயிற்றின் மீது வரிசையாக

ஒட்டிவைப்பேன் புரியுமா?

ஒட்டி வைத்த வண்ணக் கொடியை

என்ன செய்வேன் தெரியுமா?

வீட்டைச் சுற்றி தோரணமாகக்

கட்டிவைப்பேன் புரியுமா?

தோரணத்தைத் தொங்கவிட்டு

என்ன செய்வேன் தெரியுமா?

வருவோரை எல்லாம் வாசலில் நின்று

வரவேற்பேன் புரியுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.