தற்சமயம் உபயோகத்திலுள்ள மிதிவண்டி (சைக்கிள்) நாம் காணும் மோட்டார் வாகனங்களைவிடத் தொன்மையானவை அல்ல! சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்புதான் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 100 ஆண்டுகளாக அதிகமான மாற்றம் எதுவும் இல்லாமல் இன்னும் புழக்கத்தில் இருந்து வரும் ஒரே வாகனம் சைக்கிள்தான்!
1840 வரை மிதிவண்டிகளில் சுழற்றித் தண்டு
(ஸ்ரீழ்ஹய்ந்) இருந்ததில்லை. அதுவரை காலினால் தரையை உதைத்துதான் சைக்கிளை முன்னுக்கு உந்த முடிந்தது. முதன்முதலாக மேக்மில்லன் என்பவர்தான் சுழற்றித் தண்டு மற்றும் இரும்பு வளையம் கொண்ட சைக்கிளை வடிவமைத்தார்.
தற்கால சைக்கிள்களில் காணப்படும் பல் சக்கரமும் சங்கிலியும் இணைக்கப்படுவதற்கு முன்பு, சக்கரத்தை சுழற்றித் தண்டால்தான் இயக்கினர். வேகத்தை அதிகரிக்க சக்கரத்தின் விட்டத்தைக் கூட்டவேண்டி வந்தது. அப்படியே கூட்டிக் கூட்டி சக்கரத்தின் விட்டம் 160 செ.மீ. (ஒரு ஆளை விட உயரம்!) வந்துவிட்டது. பின்னர்தான் இது மீண்டும் குறைக்கப்பட்டது.
தற்சமயம் உலகத்தில் சுமார் 100 கோடி சைக்கிள்கள் பயன்பாட்டில் உள்ளன. இது உலகிலுள்ள கார்களின் எண்ணிக்கையைவிட இரு மடங்காகும்.
ஒவ்வொரு வருடமும் சுமார் 5 முதல் 10 கோடி சைக்கிள்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஒரு காரை நிறுத்துமிடத்தில் சுமார் 15 சைக்கிள்களை நிறுத்த இயலும்.
ஒரு சராசரி மனிதன் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது 25 சதவீத நேரம் 2 கி.மீ. தூரம் வரைதான் செல்கிறான். அதேபோல் 50 சதவீத நேரம் 5 கி.மீ. துரம் வரைதான் செல்வான். இப்படிப்பட்ட தூரம் செல்வதற்கு சைக்கிள் மிகவும் உபயோகப்படும்.
ஒரு வாரத்தில் மூன்று மணி நேரமோ 30 கி.மீட்டரோ சைக்கிளில் சென்றால் இதய நோய் வருவதை 50 சதவீதம் வரை குறைக்கலாம் என்கிறார்கள்.
நம் நாட்டில் சைக்கிள் பயன்படுத்துவதை நாளுக்கு 2 அல்லது 3 சதவீதம் அதிகப்படுத்தினால் சுமார் 4 லட்சம் லிட்டர் பெட்ரோல் செலவாவதைக் குறைக்கலாம்.
காருக்குப் பதில் சைக்கிளை உபயோகப்படுத்துவதால் 15 கி.மீ. வரை சென்று வருபவருக்கு குறைந்தபட்சம் 100 ரூபாய் மிச்சமாவதைத் தவிர, 5 கிலோ கரியமில வாய்வு வெளியிடப்படுவதையும் குறைக்கலாம். இதைத் தவிர 360 கலோரி உடல் கொழுப்பும் எரிக்கப்படும்.
சைக்கிளில் பயணம் செய்பவர்கள் மோதிக் கொண்டால் மரணம் ஏற்படுவது தடுக்கப்படும். ஆனால் கார்கள் மோதிக் கொண்டால் ஓரிருவர் உயிரிழக்க நேரிடும் என்பது உங்களுக்கே தெரியும்.
சைக்கிள் பராமரிப்பு ஒரு காரைக் காட்டிலும் மிகவும் சுலபமானதும் செலவில்லாததுமாகும்.
மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட எல்லா வாகனங்களையும் விட மிகவும் எரிபொருள் குறைவாகப் பயன்படுத்தும் கருவி சைக்கிள் மட்டும்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.