சிறுவர்மணி

மழை மொழிகள்

1. மாரியல்லது காரியமில்லை.  2. விட்டுவிட்டுப் பெய்கிற மழையினும் விடாமல் பெய்யும் தூவானம் நல்லது.  3. கடுங்காற்று மழை கூட்டும்; கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.  4. ஐப்பசி மேற்காற்றுக்கு அப்போதே மழை.  5. தும

ஆ.விஜயலட்சுமி

1. மாரியல்லது காரியமில்லை.

 2. விட்டுவிட்டுப் பெய்கிற மழையினும் விடாமல் பெய்யும் தூவானம் நல்லது.

 3. கடுங்காற்று மழை கூட்டும்; கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.

 4. ஐப்பசி மேற்காற்றுக்கு அப்போதே மழை.

 5. தும்பி பறந்தால் தூரத்தில் மழை.

 6. ஈசல் பறந்தால் மழை மாறும்.

 7. அந்தி ஈசல் பறந்தால் அடைமழைக்கு லட்சணம்.

 8. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்யும்.

 9. தட்டான் பறந்தால் கிட்ட மழை.

 10. மாலைக் கொசுக்கடி மழையைக் கொண்டு வரும்.

 11. தவளை கத்தினால் தானே மழை.

 12. கொக்கு மேடேறினால் மழை பெய்யும்.

 13. ஆனி அடைச்சாரல் ஆவணி முழுச்சாரல்

 14.

 புரட்டாசி பெய்ந்து பிறக்கணும்; ஐப்பசி காய்ந்து

 பிறக்கணும்.

 15. ஐப்பசி அடைமழை; கார்த்திகை கனமழை.

 16. கார்த்திகைக்கு அப்பால் மழையில்லை, கர்ணனுக்கு அப்பால் கொடையில்லை.

 17. மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.

 18. பங்குனி மழை பலனெல்லாம் சேதம்.

 19. அந்தி மழை அழுதாலும் விடாது.

 20. பனி பெய்தால் மழையில்லை; பழமிருந்தால் பூவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிஷன் தாஸ் - ஹர்ஷத் கானின் ஆரோமலே: அறிமுக விடியோ அப்டேட்!

பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

உலகை வெல்லும் முன்பு ஆசியாவை வெல்வோம்: சூர்யகுமார் யாதவ்

ஜிகிடி கில்லாடி... மெஹ்ரீன் பிர்சாடா!

மறுவெளியீடாகும் சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம்!

SCROLL FOR NEXT