முகப்பு
சிறுவர்மணி

குழந்தைகள் தினம்

நெஞ்சில் ரோசா மலரணிந்தே நிமிர்ந்த ராச நடைநடந்தார்

சிறுவர்மணி

குழந்தைகள் தினம்

நெஞ்சில் ரோசா மலரணிந்தே நிமிர்ந்த ராச நடைநடந்தார்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

 அந்நியர் எதிர்ப்புப் படையினிலே
 அண்ணலின் பாதையில் அடிபதித்தார்
 இந்தியப் பிரதமர் பதவியிலே
 எண்ணருஞ் சாதனைக் கொடிபொறித்தார்
 தேசிய ஒருமைப் பாடுஎனும்
 தேரினை இழுத்திடும் வடம்பிடித்தார்
 ஆசியப் பேரொளி ஆகிஅவர்
 அனைவரின் உள்ளத்திலும் இடம்பிடித்தார்
 
 பஞ்ச சீலக் கொள்கைதனைப்
 படைத்ததை நமக்கெனப் பரிசளித்தார்
 அஞ்சும் போரின் அழிவகற்றி
 அமைதியை வளர்த்திடப் பெரிதுழைத்தார்
 
 நெஞ்சில் ரோசா மலரணிந்தே
 நிமிர்ந்த ராச நடைநடந்தார்
 கொஞ்சிப் பேசும் மழலையரின்
 கூட்டத்தில் பாச மடைதிறந்தார்
 
 அந்த நேரு பிறந்ததினம்
 ஆகிய நவம்பர் பதினான்கே
 இந்தக் குழந்தைகள் தினம்ஆகும்
 எனநாம் கொண்டாடி இனிதுவப்போம்
 
 என்றும் மனிதருள் மாணிக்கமாய்
 இருக்கும் அவரின் ஒளித்தடத்தில்
 இன்று முதலாய் வழிநடப்போம்
 என்றே உறுதி மொழிஎடுப்போம்!

 
 

முழு கட்டுரையைப் படிக்க →