சிறுவர்மணி

முத்துக் கதை

இந்த மனிதர்கள் களவாடிச் சென்று விட்டனர்.

கோ.தமிழரசன்

 இருந்தாலும்
 இறந்தாலும்...

தோப்பு ஒன்றில் ஒரு மரக்கிளையைச் சுற்றி தேனீக்கள் மிகுதியான ஓசையுடன் விவாதம் செய்து கொண்டிருந்தன. சப்தம் கேட்டு, அங்கு பறந்து வந்த நாட்டாமை தேனீ, ""இங்கே என்ன கூச்சல்? எதற்காக இந்த ஆரவாரம்?'' என்று கேட்டது.
 மேலும், சப்தம் போடாமல் என்ன செய்தி என்பதைச் சொல்லுங்கள் என்று உத்தரவு பிறப்பித்தது.
 அப்போது தைரியமான தேனீ ஒன்று முன்வந்து, ""நாங்கள் துளித் துளியாகச் சேகரித்த தேனை, நம் இனத்தை நெருப்பிலிட்டுப் பொசுக்கிவிட்டு, இந்த மனிதர்கள் களவாடிச் சென்று விட்டனர்.
 இதைத் தட்டிக் கேட்க ஆளில்லையா? இதைப் பற்றித்தான் விவாதம் செய்து கொண்டிருக்கிறோம்'' என்று கூறியது.
 அந்தத் தேனீக்களைப் பார்த்து, நாட்டாமை தேனீ கூறியது-
 ""நாம் அழிந்தாலும் பரவாயில்லை. நாம் சேகரித்த தேன் மக்களுக்கு மருந்தாக உதவி அவர்களின் உயிரைக் காப்பாற்றுகிறது. இருந்தாலும் இறந்தாலும் நம் உழைப்பு பிறருக்குப் பயன்பட வேண்டும். நாம் பயன்படுகிறோம் என்பதில் பெருமைப்படுங்கள்'' என்று சொல்லிவிட்டு விர்ரென்று பறந்து போய் விட்டது.
 -கோ.தமிழரசன், செஞ்சி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT