முகப்பு
சிறுவர்மணி

தென் ஆப்ரிக்கா செல்லும் சுட்டிப்பயல் நேயன்

ஐந்து வயதிலிருந்து கிரிக்கெட் ஆடுகிறான் நேயன் ஷ்யாம் காங்கேயன். இதுவரை நூறுக்கும் அதிகமான மாட்சுகளில் ஆடி, அவற்றில் 40 மேன் ஆஃப் த மாட்ச் பரிசுகள் பெற்றதை, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து நாளிதழ்களின் விளையாட்டுப் பக்கங்களில் பார்த்து வியந்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:22 AM
பகிர்:

ஐந்து வயதிலிருந்து கிரிக்கெட் ஆடுகிறான் நேயன் ஷ்யாம் காங்கேயன். இதுவரை நூறுக்கும் அதிகமான மாட்சுகளில் ஆடி, அவற்றில் 40 மேன் ஆஃப் த மாட்ச் பரிசுகள் பெற்றதை, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து நாளிதழ்களின் விளையாட்டுப் பக்கங்களில் பார்த்து வியந்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நேயன் ஒபனிங் பேட்ஸ்மேன் மட்டுமல்ல, வேகப்பந்து வீச்சாளரும்கூட. இப்படி தொடக்க ஆட்டக்காரராகவும் வேகப் பந்து வீச்சாளருமாக இருப்பது அபூர்வம்.
 எத்தனை மணி நேரம் தினசரி பிராக்டிஸ் என்று கேட்டால், ""நாலு மணி நேரம்'' என்கிறான், இந்த சுட்டிப் பையன்.
 பதினைந்து வயதுக்கு உட்பட்ட ஆட்டக்காரர்களின் அணியில், பத்து வயதுகூட எட்டாத நேயனுக்கு இடம் கிடைத்தது. தான் படிக்கும் ஈஞ்சம்பாக்கம் வேல் பிங்க்பாங்க் இன்டர்நேஷனல் பள்ளி அணியின் சார்பிலும் ஆடியிருக்கிறான் நேயன். தமிழ்நாடு கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் பலரும் நேயனைப் பாராட்டியிருக்கிறார்கள்.
 தென் ஆப்பிரிக்க நகரம் ஜோஹன்ஸ்பர்க்கிலிருந்து அங்குள்ள அமைப்பு, இந்த ஆண்டு அங்கு நடைபெறும் கோடைக்கால பயிற்சி முகாமுக்கு வந்து சிறப்புப் பயிற்சி பெற நேயனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. சுட்டிப்பயலுக்கு ஒரே மகிழ்ச்சி. இன்னும் ஓரிரு வாரங்களில் நேயனின் முகவரி ஜோஹன்ஸ்பர்க்தான்.
 
 

முழு கட்டுரையைப் படிக்க →