முகப்பு
சிறுவர்மணி

கன்றுக்குட்டி

 தொல்லை கொடுக்கும் கன்றுக்குட்டி கதையைக் கேளுங்க - அதன்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:00 AM
பகிர்:

 தொல்லை கொடுக்கும் கன்றுக்குட்டி
 கதையைக் கேளுங்க - அதன்
 துடுக்குத் தனத்தை அடக்க நல்ல
 வழியைச் சொல்லுங்க
 
 கயிற்றைப் பிடித்து இழுக்கும்போது
 நகர மறுக்குமே - சலித்து
 கயிற்றை விட்ட மறுகணமே
 ஓட்டம் எடுக்குமே
 
 ஆசையாக கொடுக்கும் புல்லை
 வாங்க மறுக்குது - ஆனால்
 அம்மா வளர்க்கும் பூச்செடியில்
 வாயை வைக்குது
 
 நெற்றி கழுத்தை வருடிக் கொடுத்தால்
 சொக்கி நிற்குது - அதன்
 நீளக் குச்சிக் காலைத் தொட்டால்
 மிரண்டு நகருது
 
 மடியின் பக்கம் விட மறுத்தால்
 முட்டத் துடிக்குது - அதை
 வசப்படுத்தி நிறுத்த நல்ல
 வழியைச் சொல்லுங்க!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.