1. பச்சை அக்கா, சிவப்புத் தங்கை, வாய்க்குள் போனா கதற அடிச்சுடுவாங்க?
2. காட்டிலும் வயலிலும் பட்டுத்துணிக்கடை வைக்கிறாள் செல்லம்மா?
3. அரைக்க அரைக்கக் கரைந்திடுவான் ஊருக்கே மணம் தருவான்?
4. பள்ளத்தைக் கண்டதும் பாய்ந்தோடும் தம்பி இவன்?
5. நீல வண்ண வயலிலே பருத்திக்காடுகள் பூத்துக் குலுங்குது?
6. வெட்ட வெட்ட வளர்ந்திடும், கவனம் இல்லை என்றால் உதிர்ந்திடும்?
7. தண்ணீரில் மிதக்குது பத்துமாடி மாளிகை?
8. கடலுக்குள் பூத்தது, கோயிலிலே முழங்குது?
9. பச்சைக் கிளிப்பெண்ணுக்கு உடம்பெல்லாம் முள்ளாம்?
10. பிறை போல இருக்கும் அண்ணன், பயிர்பச்சை அறுத்திடுவான்?
விடைகள் :
1. பச்சை, சிவப்பு மிளகாய்
2. மயில்
3. சந்தனக்கட்டை
4. வெள்ளம்
5. மேகங்கள்
6. தலைமுடி
7. கப்பல்
8. சங்கு
9. கள்ளிச்செடி
10. அரிவாள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.