சிறுவர்மணி

இந்திய சுதந்திரச் சுடர்கள்!

மகாத்மா காந்தி, அம்பேத்கார்!மனிதருள் மாணிக்கம் நம் நேரு!பகத்சிங், வாஞ்சி, பாரதியார்!பாரதம் காக்க எழுந்தார்கள்!

சுப்ரமணிய பாண்டியன்

மகாத்மா காந்தி, அம்பேத்கார்!

மனிதருள் மாணிக்கம் நம் நேரு!

பகத்சிங், வாஞ்சி, பாரதியார்!

பாரதம் காக்க எழுந்தார்கள்!

கப்பல் ஓட்டினார் வ.உ.சி!

கர்ஜித் தெழுந்தார் கட்டபொம்மன்!

அப்புறப் பட்டார் அன்னியரே!

அரவிந்தர், நேதாஜி முன் நின்றார்!

கோகலே, குமரன், வ.வே.சு!

கும்பெனிப் படைக்கு எதிரானார்!

பூலித் தேவன், மருது வீரர்கள்

பொங்கி எழுந்தார் முதலாக!

செண்பகராமன், சந்திரபோஸ்

தீரர் சத்தியமூர்த்தியவர்!

செம்மல் காம ராஜரெனச்

சுதந்திரச் சுடர்கள் பலருண்டு!

நெஞ்சை விட்டு விலகவில்லை!

நேற்றைய தியாகம் அகலவில்லை!

இந்திய விடுதலை தியாகச்சுடர்கள்

எழுச்சிக் காவியம் அறிவோமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT