மதுரையில் யுவஸ்ரீ கலாபாரதி விருது வழங்கும் விழா! திறமையுள்ள மாணவ மாணவிகளுக்கு " நெல்லை பாலு' என்பவர் விருதுகளை வழங்கினார். விழாவிற்குத் தலைமை தாங்கிய தருமை ஆதீனம், "திறமையுள்ள மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வரும் நெல்லை பாலுவுக்கு தங்கத்தட்டு பரிசு தரலாம்! வெள்ளித்தட்டு பரிசு தரலாம்! ஆனால், அதற்கெல்லாம் நமக்கு வசதியில்லை. எனவே நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து கைத் தட்டைப் பரிசாக வழங்கலாம். அதுதான் அவர்களை ஊக்கப்படுத்த உதவும். அத்துடன் கைதட்டுபவர்களுக்கு "ஹார்ட் அட்டாக்' வராது என்பர்'' என்றார். கை தட்டல் விண்ணைப் பிளந்தது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.