சாதி!
கற்றுக் கரையைக்காண்பதில் சாதி!கடமை கண்ணியம்காப்பதில் சாதி!
சிறுவர்மணிசாதி!
கற்றுக் கரையைக்காண்பதில் சாதி!கடமை கண்ணியம்காப்பதில் சாதி!
கற்றுக் கரையைக்
காண்பதில் சாதி!
கடமை கண்ணியம்
காப்பதில் சாதி!
பெற்றோர் பெருமை
பெற்றிடச் சாதி!
பெரியோர்க் குதவிப்
பேணலில் சாதி!
உற்றார் உறவினர்
உவந்திடச் சாதி!
உழைப்பால் வாழ்வில்
உயர்வதில் சாதி!
மற்றோர் யாரையும்
மதிப்பதில் சாதி!
சாதி வேற்றுமை
மறுப்பதில் சாதி!
குற்றம் புரியாக்
குணத்தில் சாதி!
கொள்கை மறவாக்
கொள்கையில் சாதி!
நற்பேர் எடுத்து
நடப்பதில் சாதி!
நாட்டை நல்வழி
நடத்தலில் சாதி!