* "மொபெட்' என்பது ஆங்கிலத்தில் "மோட்டரிஸ்ட் பெடலிங்' என்பதன் சுருக்கமாகும்.
* "பாப்புலர் மியூஸிக்' என்பதன் சுருக்கமே "பாப் மியூஸிக்'
* பதினான்கு இரவுகள் - "ஃபோர்ட்டீன் நைட்ஸ்' என்பதே "ஃபோர்ட்நைட்' ஆகியது!
* நல்லெண்ணெய், நெய். இவைகளை "அக்மார்க்' இருக்கிறதா என்று பார்த்து வாங்குகிறோமே.., அந்த "அக்மார்க்' என்றால் என்ன? "அக்ரிகல்சுரல் மார்க்கெட்டிங்' என்பதன் சுருக்கமாகும்!
* "டிராயிங் ரூம்' என வரவேற்பு அறையை சொல்கிறோம் அல்லவா? அது "வித்டிராயிங் ரூம்' . அதாவது விருந்து உண்டபின் வந்தவர்களா அமர்ந்து பின்னர் வெளியே செல்வதையே அவ்வாறு கூறினர். பின்னர் "வித்" என்ற முன் சேர்க்கை காணாமல் போய் "டிராயிங் ரூம்' என்றாகிவிட்டது.
காலம்
2 கண்ணிமை = 1 நொடி
2 நொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 கணிகம்
2 கணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 நாழிகை
இரண்டரை நாழிகை = 1 ஓரை
மூன்றரை நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 ஜாமம்
4 ஜாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்ஷம்
2 பக்ஷம் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
தொகுப்பு:
ஜி.அருள்குமார், மன்னார்குடி.
நிற்க அதற்குத் தக!
ஒற்றைக் காலில் நின்றுகொண்டு கொக்குகள் மீனுக்காகத் தவம் செய்வதைப் பார்த்திருக்கிறோம்! சிதம்பரம் நடராஜர்கூட ஒற்றைக்காலைத் தூக்கித்தானே நடனம் ஆடுகிறார்! பகீரதன் கங்கை நதியைக் கொண்டு வர ஒற்றைக்காலில் தவம் இயற்றினான்! பாசுபத அஸ்திரத்தைப் பெறுவதற்கு ஒற்றைக்காலில் நின்று செய்த அர்ஜுனனின் தவம் பிரசித்தி பெற்றது! சிவபெருமானை அடைவதற்கு உமாதேவி ஓற்றைக்காலில் நின்று தவம் செய்த குறிப்புகள் புராணங்களில் உள்ளன. முனிவர்கள் இறைவனை அடைய நின்று கொண்டு தவம் இருப்பதை நாம் கதைகளில் படித்திருக்கிறோம்!
அட! ஒற்றைக்காலால் வேண்டாம்! இரண்டுகால்களால் நிற்கவாவது நாம் பழகவேண்டுமாம்!
ஒரு மனிதன் நாள்தோறும் மூன்று மணிநேரம் நின்றால் அவருடைய ஆயுள் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் அதிகரிக்கும் என்று அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்! இவ்வாறு மூன்று மணிநேரம் நிற்பது பத்து மாரத்தான் ஓட்டங்கள் ஓடுவதற்கு சமம் என்று டாக்டர்
மைக் லூஸ மோர் என்ற அறிஞர் கண்டறிந்துள்ளார்! டாக்டர் மைக் இலண்டனில் விளையாட்டுப் பயிற்சித் துறை நிபுணரும், இலண்டன் ஒலிம்பிக் போட்டியின் குத்துச் சண்டை குழுவின் தலைமை மருத்துவராகவும் இருந்தார்!
நிற்பதால் எண்ணற்ற பயன்கள் ஏற்படுகின்றன! புற்று நோய், மற்றும் சர்க்கரைநோய் வராமல் தடுக்கமுடியும்! மேலும் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் வராமல் காத்துக் கொள்ள முடியும்!
வின்சென்ட் சர்ச்சில், பில் கேட்ஸ், பெஞ்சமின் ப்ராங்க்ளின், போன்ற பல அறிஞர்கள் நின்றுகொண்டே வேலை செய்ய வேண்டும் என்பதற்காக உயரமான மேசைகளை செய்து அவ்வாறே அவற்றைப் பயன்படுத்தினார்கள்! பேருந்துகளில் ஓட்டுநர்களைவிட நடத்துநர்கள் ஆரோக்கியமாக உள்ளதாக சமீபத்தில் வெளிவந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
படுக்கை, கணிணி, தொலைக்காட்சி, போன்றவற்றால் நம் நிற்கும் வாய்ப்புகள் ஏராளமாகக் குறைந்து விட்டது! தினமும் சிறிது நேரமாவது நிற்கப் பழகிக் கொண்டு விட்டால் நீண்டகாலம் நோய்நொடி இல்லாமல் நீடூழி வாழலாம்! அதுக்குன்னு ஒற்றைக்காலில் எல்லாம் வேண்டாங்க...., இரண்டுகால்களாலும் நிற்கலாமே!
ரவிச்சந்திரன்,
சிதம்பரம்.
* பைபிளில் இடம் பெறாத ஒரு பிராணி பூனை!
* பூனைகளை வளர்த்த முதல் நாடு எகிப்து!
* குறைந்தபட்சம் 15 மணி நேரம் தூங்குமாம்!
* இவற்றால் பூமியின் ஈர்ப்புச் சக்தியை உணர
முடியும்!
* எங்கு கொண்டு விட்டாலும் தன் பழைய
இடத்துக்கு வந்துவிடும்!
* பூனைகளைக் கண்டு பயப்படுவதற்கு
கேடாஃபோபியா!
தெப்பக்குளம்!
தமிழ்நாட்டலேயே மிகப் பெரிய தெப்பக்குளம் மதுரையிலுள்ள மாரியம்மன் தெப்பக்குளமாகும்! 1635இல் திருமலை நாயக்கரால் அமைக்கப்பட்ட இந்தக் குளம் தெற்கு வடக்காக 1000 அடி
நீளமும் கிழக்கு மேற்காக 950 அடி அகலமும் கொண்டது!
விருந்து!
பாங்காக்கிலிருந்து 150 கி.மீ. தொலைவிலுள்ள லம்புரி மாகாணத்தில் பழமை வாய்ந்த கோயில் ஒன்று உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் "குரங்குத் திருவிழா' நடைபெறுகிறது! விழாவில் குரங்குகள் விரும்பி உண்ணும் காய்கறிகள், பழங்கள், சுமார் 4000 கிலோ வரை படைப்பார்கள்!
பதிணெண் கீழ் கணக்கு நூல்கள்!
நாலடியார் - சமண முனிவர்
நான் மணிக்கடிகை - விளம்பிநாகனார்
இன்னா நாற்பது - கபிலர்
இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
ஏலாதி - கணி மேதாவியார்
திரிகடுகம் - நல்லாதனார்
முதுமொழிக்காஞ்சி - கூடலூர் கிழார்
திருக்குறள் - திருவள்ளுவர்
ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளயார்
பழமொழி - மூன்றுரையனார்
சிறுபஞ்சமூலம் - கார்யாசான்
ஐந்திணை ஐம்பது - மூவாதியார்
ஐந்திணை எழுபது - மூவாதியார்
திணைமொழி ஐம்பது - கண்ணன் சேத்தனார்
கைந்நிலை - புல்லங்காடனார்
கார்நாற்பது - கண்ணங்கூத்தனார்
களவழி நாற்பது - பொய்கையார்
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன் கோட்டை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.