சிறுவர்மணி

சபதம்!

அந்த அறிவியல் ஆய்வகத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானி தன் மேலதிகாரியிடம் கூறினார். ""தன் பிள்ளைகளை இன்று மாலை 5 மணிக்கு கண்காட்சிக்கு அழைத்துச் செல்ல தனக்கு அனுமதி வேண்டும்'' என்றார். மேலதிகாரியும் அனுமதி தந்தார்.

என். ராஜப்பா மன்னார்குடி.

அந்த அறிவியல் ஆய்வகத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானி தன் மேலதிகாரியிடம் கூறினார். ""தன் பிள்ளைகளை இன்று மாலை 5 மணிக்கு கண்காட்சிக்கு அழைத்துச் செல்ல தனக்கு அனுமதி வேண்டும்'' என்றார். மேலதிகாரியும் அனுமதி தந்தார்.

வேலையில் அதிக ஆர்வம் காரணமாக மும்முரமாய் பணியாற்றிய விஞ்ஞானி, கடிகாரத்தைப் பார்த்தபோது மணி எட்டு, "பிள்ளைகள் ஏமாற்றமடைந்திருப்பார்கள். கடும் கோபத்தில் இருப்பார்கள்' என்று எண்ணியவாறே பயத்துடன் வீட்டுக்குப் போனார். வீட்டில் மனைவி மட்டுமே இருந்தார். ""குழந்தைகள் எங்கே?'' என்றார். மனைவி சொன்னார்.

""சரியாக 5 மணிக்கு குழந்தைகள் கண்காட்சியினைப் பார்க்கப் போய்விட்டார்களே. உங்கள் மேலதிகாரிதான் வந்து அழைத்துப் போனார்'' என்றார்.

வேலையில் மூழ்கிவிட்டதைக் கவனித்த மேலதிகாரி அந்த விஞ்ஞானியையும் தொந்தரவு செய்யவில்லை. குழந்தைகளின் கனவையும் நிராசையாக்க விரும்பவில்லை. தானே சென்று குழந்தைகளை அழைத்துச் சென்றார். அது சரி. அந்த மேலதிகாரி யார் என்கிறீர்களா? அவர்தான் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயர் மாற்றம்! கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

திடீரென குறுக்கே வந்த மாடு! விபத்துக்குள்ளான வேன்! 15 பேர் காயம்!

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

SCROLL FOR NEXT