சின்னச் சின்ன பட்டாசு
சிதறும் வண்ண மத்தாப்பு
கண்ணைப் பறிக்கும் வாண வெடி!
கண்ணும் கருத்துமாய் வெடி!
உண்ணச் சுவையாய் பலகாரம்
உடுத்தும் உடையில் அழகாடும்!
எண்ணத் தெரியா சந்தோஷம்
எனக்கும் உனக்கும் மிகுமன்றோ!
அன்னத் தோரணை உன் நடையில்
அமுதம் சிந்தும் உன் மொழியில்
சின்னத் தேரென நடந்தபடி
சீக்கிரம் வெடிவெடி சிரித்தபடி!
மின்னல் போலே ஒளி ஆட்டம்
மிகுதே வானில் எழில் தோற்றம்!
இன்னல் மறந்தே வெடித்திடுவாய்
மத்தாப்பூவைப் பிடித்திடுவாய்!
இன்பம் பொங்கும் திருநாளில்
இதயம் கலந்து உறவாடி
இதுதான் பண்டிகை கொண்டாடு
இணைந்தே பிறருடன் ஒன்றாகு!
அன்பெனும் தோரணம் வாயிலிலே
ஆடணும் அசையணும் வாழ்வினிலே
தன்னலமில்லா மனதோடு
தங்கப் பாப்பா கொண்டாடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.