கதைப் பாடல்: விசித்திர விலங்குகள்!
காட்டு விலங்கினங்களான - சிங்கம்கரடி புலியிவைகள் பாப்பா
சிறுவர்மணிகதைப் பாடல்: விசித்திர விலங்குகள்!
காட்டு விலங்கினங்களான - சிங்கம்கரடி புலியிவைகள் பாப்பா
காட்டு விலங்கினங்களான - சிங்கம்
கரடி புலியிவைகள் பாப்பா
வீட்டுச் சிறுகுழந்தை யோடு - தங்கும்
விசித்திரம் நிகழ்வதுண்டு பாப்பா!
ஆட்டைத் துரத்தியவை ஓடி- சென்று
அறைந்தும் புசிப்பதில்லை பாப்பா!
வேட்டை ஆட மிக விரும்பி -என்றும்
பதுங்கி மறைவதில்லை பாப்பா!
வாட்டும் வெயிலுக்கவை நீரும்- இன்றி
வதங்கும் உயிர்களில்லை பாப்பா!
நாட்டின் நியதிப்படி யாரும் - கண்டு
நடுங்கும் பயமுமில்லை பாப்பா!
மூட்டும் கலக நரி வாயை - இங்கு
மூடிக் கிடந்திடுமே பாப்பா!
போட்டு அணைத்தபடி நீயும் - துஞ்சும்
பொம்மை விலங்கவையே பாப்பா!