சிறுவர்மணி

கதைப்பாடல்: பதினாறு செல்வங்கள்

நிலைபெறும் புகழ் - பாப்பாநீடுகொள் கல்வி!

கடம்பை அறிவு

நிலைபெறும் புகழ் - பாப்பா

நீடுகொள் கல்வி!

உலைநிறை நெல் - தம்பி

உரம்மிகு அறிவு!

கலையாழ் பொன் - பாப்பா

கனஞ்சூழ் துணிவு!

தொலைக்கால ஆயுள் - தம்பி

தொய்விலாப் பெருமை!

வளம்தரும் இளமை - பாப்பா

வாழ்வொத்த நுகர்ச்சி!

உளம்மகிழ் மக்கள் - தம்பி

உய்யநல் பொருள்!

களம்நல வெற்றி - பாப்பா

களிப்புறும் நோயின்மை!

தளம்ஒளிர் ஆற்றல் - தம்பி

தரணிவாழ் நல்லூழ்!

செல்வங்கள் பதினாறும் - பாப்பா

செழித்திடப் பேறாகும்!

நன்னெறி மனம்சூழ - தம்பி

நானிலம் சீராகும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகள் மீட்பாளர்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சலுடன் கூடிய வலி நீங்க...

ஜெமினி கணேசன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 43

பேல்பூரி

சாக்லெட்

SCROLL FOR NEXT