முகப்பு
சிறுவர்மணி

விடுகதைகள்

சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது. இது என்ன?

Updated On : 20 ஜூன், 2016 at 8:29 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:02 PM

1.   சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது. இது என்ன?

2.    சட்டையைக் கழற்றினால் சத்துணவு. இது என்ன?

3.   கையை வெட்டுவார், கழுத்தை வெட்டுவார், ஆனாலும் இவர் நல்லவர். யார் இவர்?

Advertisement

4.   சுழல் காற்றும் நின்று போகும். ஆனால் இவனுடைய சுழல் மட்டும் நிற்காது. யார் இவன்?

5.   மடித்து விரிக்காத பாய், யாருமே படுக்காத பாய், தரையில் கிடக்காத பாய், காலையிலே புதுப் பாய், இரவிலே ஓட்டைப் பாய். இது என்ன?

6.    மேலே மட்டும் போவேன், கீழே வரவே மாட்டேன். நான் யார்?

7.   என் உடல் முழுவதும் காற்று, ஆனாலும் நான் சுவாசிக்க மாட்டேன். நான் யார்?

8.   உனக்கு முன்னாலும் போவேன், உனக்குப்

பின்னாலும் வருவேன். ஆனால் ஒருபோதும் மேலே மட்டும் போக மாட்டேன். நான் யார்?

9.   சங்கரின் அம்மாவுக்கு மூன்று ஆண் பிள்ளைகள். மூத்தவன் பெயர் முருகன், இரண்டாமவன் பெயர் கணேஷ். கடைசிப் பையனின் பெயர் என்ன?

விடைகள்:

1. காய்ந்த மிளகாய்  2. வாழைப்பழம்  3. தையற்காரர்  4. கடிகார முள்  5. வானம்  6.வயது  7. பலூன் 8. நிழல்  9. சங்கர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.