திருவிழா
சர்..ரு... சர்..ருன்னுப் போகுதுதலைக்கு மேலே வானம்தான்!
சர்..ரு... சர்..ருன்னுப் போகுது
தலைக்கு மேலே வானம்தான்!
சில்லு... சில்லுனு கரகாட்டம்
சுற்றி வந்திடும் இராட்டினம்!
டிங்கு டாங்கு வீதியில்
அசைந்து போகும் ஆனைதான்!
டொம்மு டொம்முனு மேளந்தான்
தேரில் சாமி ஊர்வலம்!
பெரிய பெரிய பலூன்கள்
புதிது புதிதாய்ப் பொம்மைகள்!
பெரிய கோயில் திருவிழா
விடிய விடிய கொண்டாட்டம்!