1. பாரில் வந்து சேரும் முன்னே, பத்து மாதம் சிறைவாசம்...
2. கருப்பன் ஒருவன் வெள்ளையன் ஒருவன், காண்பது இல்லை; தொடர்வது உண்டு...
3. கூடப் பிறந்த இருவருக்குக் குறுக்கே சுவர் உண்டு, ஒருவரை ஒருவர் பாரார்...
4. வாங்குவோர், தனக்குப் பயன்படுத்தார். தனக்குப் பயன்படுத்துவோர் பார்க்க மாட்டார்.
5. மரத்துக்கு மேலே பழம், பழத்துக்கு மேலே மரம்.
6. கறுப்புத் தொப்பி அணிந்த கனவான் } அவர் யார்?
7. எத்தனை அடி அடித்தாலும் இம்மியும் வலிக்காது...
8. உச்சியிலே நீண்ட இலை, உடம்பெல்லாம் கணுக் கணுவாம், தின்பதற்கோ மிக ருசியாம், தேவையில்லை என்பார் யார்?
9. சின்னக் குகைக்குள்ளே சிவப்புத் துணி } அது எந்நேரமும் ஈரம், எளிதில் உலராது...
விடைகள்:
1. குழந்தை பிறப்பு
2. இரவும் பகலும்
3. கண்கள்
4. சவப்பெட்டி
5. அன்னாசிப் பழம்
6. தீக்குச்சி,
7. உரல்
8. கரும்பு
9. நாக்கு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.