சிறுவர்மணி

அஃறிணைத் தகவல்

தனது கையே தனக்கு உதவிதாரகம் சொல்லும் சிலந்தி!

கடம்பை அறிவு

தனது கையே தனக்கு உதவி

தாரகம் சொல்லும் சிலந்தி!

கனமும் உழைப்பு வளமே நல்கும்

கடமையை சொல்லும் எறும்பு!

நன்றி மறவா குணமே பெரிது

நயத்தைச் சொல்லும் நாய்கள்!

தன்ன லமற்ற வாழ்வு இனிது

தகவலைச் சொல்லும் தேனீ!

பரிவு கொள்வோர் நலமே சிறப்பு

பண்பைச் சொல்லும் மாடு!

மரித்த பின்னும் பயனாய் நின்று

மாண்பைச் சொல்லும் மரங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகள் மீட்பாளர்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சலுடன் கூடிய வலி நீங்க...

ஜெமினி கணேசன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 43

பேல்பூரி

சாக்லெட்

SCROLL FOR NEXT