சிறுவர்மணி

அங்கிள் ஆன்டென்னா

மீன்களில் எலக்ட்ரிக் ஈல் என்னும் மீன் மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்கிறது  என்கிறார்கள். இது உண்மையா? எதற்கு இந்த மின்சாரம்?

ரொசிட்டா

கேள்வி: 
மீன்களில் எலக்ட்ரிக் ஈல் என்னும் மீன் மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்கிறது  என்கிறார்கள். இது உண்மையா? எதற்கு இந்த மின்சாரம்?

பதில்: 
உண்மைதான்! ஆனால்,  நமக்குத் தெரிந்தது போல எலக்ட்ரிக் ஈல் மட்டுமல்ல, ஆப்பிரிக்காவின் மின்கெளிறு, இந்தியக் கடலிலில் வாழும் மின் திருக்கை, ஜிம்னார்க்ஸ் கோப்பஸ் போன்ற பல மீன்கள்,  மின்சாரத்தை உடலில் கொண்டிருக்கின்றன... பாய்ச்சுகின்றன. 
பத்து அடி நீளம் இருக்கும் எலக்ட்ரிக் ஈல் மீனின் உடம்பில் முக்கால் பகுதி வால்தான்! இந்த வாலிலில் உள்ள பக்கவாட்டுத் தசைகள்தான் மின் உற்பத்தி நிலையங்கள்.
இவற்றைப் பயன்படுத்தி, வினாடிக்கு 600 வோல்ட் மின்சாரத்தை இந்த மீன்கள் பாய்ச்சும். மீனின் மின்தாக்குதலிலில் சிக்கினால், அதிவலிமையான மனிதன்கூட ஸ்தம்பித்துத்தான் போக நேரிடும்.
நம்மூரில் நெய்வேலியிலும் இன்ன பிற மின் நிலையங்களிலும் இந்த மீனை வளர்த்தால் மின்சாரப் பற்றாக்குறையை ஈடு செய்யலாம் என்று தோன்றுகிறதல்லவா?  இந்த மீன்கள் அதற்காகவெல்லாம் மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை.
தன்னைத் தாக்க வரும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கதான் இந்த ஷாக் டிரீட்மெண்ட். இது மட்டும் இல்லையென்றால் மனிதன் இதையும்  பிடித்து கருவாடு போட்டுவிடுவான். அல்லது பெரிய சைஸ் மீன்கள் கவ்விக்கொண்டு போய்விடும் என்ற எச்சரிக்கைதான் காரணம்.

அடுத்த வாரக் கேள்வி
விலங்குகளையும் கருணைக் கொலை 
செய்வதுண்டா?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

SCROLL FOR NEXT