முகப்பு
சிறுவர்மணி

கதைப் பாடல்: நிலா!

தண்டு இலைகள்தண்ணீர் இன்றி

சிறுவர்மணி

கதைப் பாடல்: நிலா!

தண்டு இலைகள்தண்ணீர் இன்றி

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

தண்டு இலைகள்
தண்ணீர் இன்றி
விண்ணில் மலரும்
வெண்தா மரைப்பூ!

வண்டு தேனீ
வாசப் பூந்தேன்
உண்டு மயங்கி
உறங்கா மஞ்சம்!

மண்ணில் வாழும்
மாந்தர் யாரும்
தின்ன முடியாத
தேங்காய் மூடி!

வண்ண ஒளியை
வாரி வழங்கிக்
கண்ணைக் கவரும்
காந்த விளக்கு!

தென்றல் வருடத்
தேய்ந்து வளர்ந்து
பொன்வான் நுதலில்
பொலியும் திலகம்!

எண்ணெய், திரி, தீ
எதுவும் தேடா
வெண்ணைத் தீப
வெளிச்சத் தீவு!

மண்டிக் கிடக்கும்
மையிருள் விலக்க
எண்ணி உதிக்கும்
இரவுச் சூரியன்!

உண்மைச் சூரிய
ஒளியை வாங்கித்
தண்மை ஆக்கித்
தரும் குளிர் சாதனம்!

சண்டை நடவாச்
சமத்துவப் பூமி!
அழகு நிலவோர்
அமைதிப் பூங்கா!

முழு கட்டுரையைப் படிக்க →