முகப்பு
சிறுவர்மணி

தன் வினை!

வாழைப்பழத்தைச் சாப்பிட்ட குட்டிக் குரங்கு அதன் தோலை நடைபாதையில் போட்டது. அந்தப் பக்கம் ஒரு ஆமை ஊர்ந்து வந்தது.

Updated On : 8 செப்டம்பர் 2017, 10:17 pm IST
பகிர்:

வாழைப்பழத்தைச் சாப்பிட்ட குட்டிக் குரங்கு அதன் தோலை நடைபாதையில் போட்டது. அந்தப் பக்கம் ஒரு ஆமை ஊர்ந்து வந்தது.
""குட்டிக் குரங்கே!.....பாதையில் பழத்தோலைப் போட்டால் யாராவது மிதித்துச் சறுக்கி விழுந்து விட மாட்டார்களா? தோலை ஓரமாகப் போடலாமே'' என்றது ஆமை.
""ஏய்!....ஓட்டு மூடி போட்ட ஆமையே!....வாயை மூடிக்கொண்டு போ!....உன்னோட அறிவுரை எனக்குத் தேவையில்லே!...''என்று ஆணவமாகச் சொன்னது குட்டிக் குரங்கு.
இதைக் கேட்ட ஆமை அமைதியாகச் சென்று விட்டது.
குட்டிக் குரங்கு பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அந்தக் குட்டிக் குரங்கை ஒரு வேடன் பார்த்து விட்டான்!
வேடனைப் பார்த்த குட்டிக் குரங்கு ஓட ஆரம்பித்தது. ஓடிய வேகத்தில் அதன் கால் பழத்தோலின் மீது சறுக்கியபடிதரையில் சுருண்டு விழுந்தது! உடலெங்கும் பட்ட அடியோடு ஒரு வழியாக ஓடித் தப்பித்தது. ஒரு மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டது. உடலெங்கும் வலித்தது. குரங்கு, அந்த ஆமை சொன்னதைக் கேட்டிருக்கலாம் என்று மனதில் நினைத்தது!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments