ராயல் என்ஃபீல்ட் விற்பனை 27% அதிகரிப்பு!
ராயல் என்ஃபீல்டு பைக்குகள் இந்தியாவில் 350சிசி மோட்டார் சைக்கிள்களுடன் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
மும்பை: ராயல் என்ஃபீல்டு பைக்குகள்ஷ இந்தியாவில் 350சிசி மோட்டார் சைக்கிள் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
ராயல் என்ஃபீல்ட், இந்திய சந்தையில் தொடர்ந்து வலுவான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 89,540 பைக்குகள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டின் ஜூன் மாத விற்பனை 27% உயர்ந்து 1,14,032 வாகனங்களாக அதிகரித்துள்ளது.
மேலும், இக்காலகட்டத்தில், தனது முதல் மின்சார மோட்டார் சைக்கிளான 'ஃப்ளையிங் ஃப்ளீ சி6' மாடலை பெங்களூருவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது.
Advertisement
Advertisement
பல்வேறு சந்தைகளில் எங்களின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளுக்குக் கிடைத்துள்ள சிறப்பான வரவேற்பால், எங்களின் ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சிப் பாதையைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது என்று ஐச்சர் மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான கோவிந்தராஜன் தெரிவித்தார்.
முதல் மின்சார மோட்டார் சைக்கிளுக்குக் கிடைத்து வரும் வரவேற்பு மிகவும் ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் இந்த விற்பனை வேகத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் நாங்கள் உறுதியோடு இருக்கிறோம் என்றார் கோவிந்தராஜன்.
Royal Enfield on Wednesday reported a 27 per cent growth in total sales in June 2026.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.