அட்வென்ச்சர் பிரியர்களுக்கு குட் நியூஸ்! நாளை களமிறங்கும் ஹிமாலயன் 440!
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய ஹிமாலயன் 440 அட்வென்ச்சர் பைக் பற்றி..
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய ஹிமாலயன் 440 அட்வென்ச்சர் பைக்கை நாளை (செப். 4)ல்9 இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தியாவில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்ஃபீல்ட் தொடர்ச்சியான உற்பத்தில் உள்ள மோட்டர் சைக்கிள் பிராண்டாகும்.
சிறப்பம்சங்கள் என்ன?
Advertisement
Advertisement
புல்லட் கிளாசிக் 350, ஹண்டர் 350 உள்ளிட்ட பல்வேறு மாடல்களை அளித்துள்ள நிலையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வடிவமைத்துள்ள புதிய ஹிமாலயன் 440 பைக்கை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்கிராம் 440 பைக்கில் உளள அதே 443 சிசி, ஏர்/ ஆயில் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் இதில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த என்ஜின் 25.4 பி.எச்.பி. பவரையும், 34 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வழங்குகிறது. இதனுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள ஹிமாலயன் 440, பழைய 411 சிசி மாடலை விட நெடுஞ்சாலைகளுக்கு ஏற்ற வகையில் ஹிமாலயன் 440 உருவாக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இதில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்விட்ச்சபிள் ஏபிஎஸ், டிரிப்பர் நேவிகேஷன் மற்றும் பைக்கில் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ள 21 இன்ச் சக்கரம்,17 இன்ச் ஸ்போக்டு வீல்கள் ஆகிய திறன்களை அதிகரிக்கும்.
இதன் எக்ஸ் - ஷோரூம் விலை சுமார் ரூ. 2.20 லட்சம் முதல் ரூ. 2.50 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.